இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா!: பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை உடனடியாக தடை செய்க...மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வலியுறுத்தல்..!!
2020-12-21@ 14:29:44

டெல்லி: இங்கிலாந்தில் மாறுபட்ட குணங்களுடன் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில், வளர்ச்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது முன்னாள் வைரஸை விட 70 சதவீதம் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் திறன் கொண்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாக்க இருக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் சவூதி அரேபியா, துருக்கி, பல்வேறு ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் உள்ளிட்டவை பிரிட்டன் உடனான விமான போக்குவரத்தை நிறுத்திவிட்டன.
மேலும் பிரிட்டன் உடனான தரைவழி எல்லையையும் மூடிவிட்டன. இதுபோன்ற எந்த முடிவும் இந்தியாவில் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பிரிட்டன் உடனான விமான போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்தில் சில மாறுபட்ட குணங்களுடன், கொரோனா வைரஸ் பரவி வருவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
திருப்பதி கோயில்களில் பக்தர்கள் தரிசிக்க தடை....தேவஸ்தானம் அறிவிப்பு
அரசு மருத்துவமனையில் நேர்ந்த அவலம் மபி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறை 6 கொரோனா நோயாளிகள் பலி
12 நாட்களில் பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பு சூறாவளியாக சுழன்று தாக்கும் கொரோனா....டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் படுமோசம்; 7 ஆயிரம் படுக்கைகள் கேட்டு கெஜ்ரிவால் கடிதம்
தமிழகத்தில் இருந்து வந்தால் நெகட்டிவ் சான்று கட்டாயம்: கேரள அரசு உத்தரவு
கடவுளின் பூமியில் சாத்தான்கள் அட்டகாசம்; ஸ்கூட்டரில் நாயை கட்டி இழுத்து சென்ற வாலிபர்.... சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ
57 வளரும் நாடுகளில் 45 சதவீத பெண்கள் ‘நோ’சொல்ல முடியாது: ஐநா மக்கள் தொகை நிதியம் அறிக்கை
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்