சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்கு கணக்கெடுப்பில் யானை தாக்கி 2 பேர் பலி
2020-12-18@ 01:53:11

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நேற்று நடந்த வனவிலங்கு கணக்கெடுப்பு பணியின்போது யானை தாக்கி வனக்காவலர், தன்னார்வலர் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக் காலத்திற்குப் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. 22ம் தேதி வரை 6 நாட்களுக்கு இப்பணி நடைபெறுகிறது. புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள 10 வனச்சரகங்களில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 350 பேர் குழுவாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று விளாமுண்டி வனச்சரகத்திற்குட்பட்ட கல்லம்பாளையம் வனப்பகுதியில் மாயாற்றுக்கு தெற்குப் பகுதியில் வனக்காப்பாளர் பொன் கணேஷ் தலைமையில் வனக்காவலர் சதீஷ், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவாக இந்த பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புதர் மறைவில் நின்றிருந்த யானை, அவர்களை திடீரென துரத்தியது. இதில், வனக்காவலர் சதீஷை யானை தும்பிக்கையால் பிடித்து கீழே போட்டு மிதித்து கொன்றது. அவரை காப்பாற்ற முயன்ற வனக்காப்பாளர் பொன் கணேசையும், தூத்துக்குடியைச் சேர்ந்த தன்னார்வலர் பிரபாகரனையும் யானை தாக்கியது. இதில் பிரபாகரன் பரிதாபமாக இறந்தார். பொன்கணேஷ் படுகாயமடைந்தார். வனத்துறை அதிகாரிகள் வந்து அவரை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி உயிரிழந்த சதீஷ் (21) ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர். திருமணமாகாதவர். யானை தாக்கி 2 பேர் இறந்த சம்பவம்,சத்தியமங்கலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Satyamangalam Tiger Reserve Wildlife Survey Elephant Slaughter சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வன விலங்கு கணக்கெடுப்பு யானை பலிமேலும் செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரையில் மனைவியுடன் நடந்து சென்றவர் மயங்கி பலி
சிசு உயிரிழப்பை பூஜ்யநிலைக்கு கொண்டுவர வலியுறுத்தல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட 29 பேர் மயக்கம்: திண்டிவனம் ஆட்சியர் நேரில் ஆய்வு
உஸ்ஸ்ஸ்... அப்பாடா.... அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு
கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
நாகை அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!