சிறுமிக்கு பாலியல் தொல்லை
2020-12-15@ 00:06:35

மங்களூரு: தென்கனரா மங்களூரு மாவட்டம் சுளியா தாலுகா தேவசல்லா கிராமத்தில் வசித்து வருபவர் அனில். இவர் தனியார் பள்ளியில் சூப்ரவைசராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், கடந்த டிச. 10ம் தேதி தனது நண்பரின் மகளிடம் புதிய சைக்கிள் வாங்கி கொடுப்பதாகவும், சைக்கிளை மிதிப்பது எப்படி என்பது தொடர்பாக கற்று கொடுப்பதாக கூறியுள்ளார். அப்போது, அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து, நடந்த சம்பவத்தை சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் அனிலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, சுப்ரமணியா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அனிலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வெளியுறவுத்துறை அமைச்சக தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய வாலிபர் கைது: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா? போலீஸ் தீவிர விசாரணை
வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது
மோட்டார் திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி
சண்டையை விலக்கி விட்ட போலீஸ்காரருக்கு சரமாரி அடி உதை: வாலிபர் கைது
சுங்கத்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது: ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்த இருவருக்கு வலை
செல்போனை பறித்து அடைத்து வைப்பு பின்னலாடை நிறுவனத்தில் 19 பெண் தொழிலாளர் மீட்பு
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!