ஜன.15-ம் தேதிக்குள் சோமாலியா நாட்டில் உள்ள அமெரிக்கப்படைகளை திரும்ப பெற உத்தரவு: பின்னடைவாக கருதத் தேவையில்லை என பென்டகன் விளக்கம்
2020-12-05@ 16:20:33

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்படி ஜனவரி 15-ம் தேதிக்குள் சோமாலியா நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாக பெண்டகன் அறிவித்துள்ளது. சோமாலியாவில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அல் ஷபாப் பயங்கரவாதிகள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த சோமாலியா அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த வேட்டையில் அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டின் உள்நாட்டுப் படைகளுக்கு அமெரிக்கப் படைகள் பயிற்சி அளித்து வருகின்றன.
இந்நிலையில் ஜனவரி 15-ம் தேதிக்குள் சோமாலியா நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாக அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். எனினும் இதனால் பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதத் தேவையில்லை என பென்டகன் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
குற்றவாளி என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன: நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!!
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய டிரக் ஓட்டுநர்கள்...கண்டெய்னர் தட்டுப்பாடு அதிகரித்ததால் இறக்குமதி முடங்கும் அபாயம்
ஈக்வெடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் சிறை கைதிகள் பயங்கர மோதல்!: 80 கைதிகள் கொல்லப்பட்டதால் பதற்றம்..!!
உலக கொரோனா நிலவரம்: 25.07 லட்சம் பேர் உயிரிழப்பு; 11.30 கோடி பேர் பாதிப்பு; 88.70 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்
ஐநா தீர்மானத்துக்கு இலங்கை எதிர்ப்பு: மனித உரிமை மீறல் விவகாரம்
அமெரிக்க பட்ஜெட் துறைக்கு நீராவை விட்டால் வேறு ஆளில்லை: வெள்ளை மாளிகை பிடிவாதம்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்