இந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவி: அமெரிக்கா வழங்குகிறது
2020-12-05@ 00:13:30

வாஷிங்டன்: சி-130ஜெ சரக்கு விமானத்திற்கு தேவையான உபகரணங்கள் உட்பட ரூ.675 கோடிக்கான பாதுகாப்பு கருவிகள், தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் தயாரிப்பான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ் சரக்கு விமானத்தை இந்திய விமானப்படை பயன்படுத்தி வருகிறது. பேரிடர் காலங்களிலும், எல்லையில் வீரர்களையும் ராணுவ தளவாடங்களையும் கொண்டு சேர்ப்பதில் இந்த விமானம் சிறப்பான சேவையாற்றி வருகிறது. இந்நிலையில், சி-130ஜெ விமானத்திற்கு தேவையான துணை உபகரணங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளை வாங்கி அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
1971ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்தபோது, கராச்சி துறைமுகத்தின் மீது இந்திய கடற்படை நடத்திய தாக்குதலை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. நேற்று கடற்படை தினத்தையொட்டி, இந்திய கடற்படை வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய கடல் எல்லையை பாதுகாக்கும் கடற்படை வீரர்களை எண்ணி இந்த தேசம் பெருமை கொள்வதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டி உள்ளார்.
மேலும் செய்திகள்
மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்க!: அதிபர் ஜோ பைடன் ஆணை..!!
கொழும்பு துறைமுக கன்டெய்னர் முனையம்: மீண்டும் இந்தியாவுக்கே கொடுத்தது இலங்கை
பயணிக்கு உடல்நிலை பாதிப்பு: இந்திய விமானம் பாக்.கில் அவசரமாக தரையிறக்கம்
எச்1பி விசா தடை ரத்து பைடன் அரசு குழப்பம்: நீக்கலாமா? வேண்டாமா?
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவில் சிக்கல்
ஜோ பைடனின் 100 நாள் செயல் திட்டத்திற்கு பலன்!: அமெரிக்காவில் தினசரி கொரோனா தொற்று குறைந்து வருவதாக புள்ளி விவரம் தகவல்..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்