பேத்தி நிச்சயதார்த்தத்தில் கொரோனா விதிமீறல் : பாஜ மாஜி அமைச்சர் உட்பட 18 பேர் கைது
2020-12-04@ 17:59:55

அகமதாபாத், :குஜராத்தில் கொரோனா வழிகாட்டுதலை மீறியதற்காக பாஜக முன்னாள் அமைச்சர், அவரது மகன் உட்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். அம்மாநில ஐகோர்ட் கண்டிப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குஜராத் மாநில பாஜக முன்னாள் அமைச்சர் காந்தி காமித் பேத்தியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி டோஸ்வரா கிராமத்தில் நடந்தது. இந்த விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். கொரோனா வழிகாட்டுதலின் படி, திருமண விழாவில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளக் கூடாது. ஆனால் அமைச்சரின் பேத்தியின் நிச்சயதார்த்தத்தில் முகக் கவசம் அணியாமல் ஆயிரக்கணக்கான உறவினர்கள் கலந்து கொண்டனர்.
அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும், உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக மாநில காவல்துறை கடுமையாக கண்டித்தது. உயர்நீதிமன்றத்தின் கடுமையான கருத்துக்களைத் தொடர்ந்து, தற்போது அமைச்சருக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் காந்தி காமித் ஐபிசி மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் 308, 188, 269, 270 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், அவரது மகன் ஜிதேந்திர காமித், சோனேகர் நகராட்சி உறுப்பினர் வினோத் சந்தத்ரேயா, பாஜக செயற்பாட்டாளர் கெவின் தேசாய், வீடியோகிராபர், மேடை அலங்கரிப்பாளர், சமையல்காரர்கள் உட்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். அதேசமயம், நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள்
வரும் 27ம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில், சசிகலாவுக்கு மூச்சுத்திணறல்.... அதிர்ச்சியில் அமமுகவினர்
வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதின் விளைவு!: 17 கோப்புகளில் கையெப்பம் இட்டார் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி..!!
எல்லையில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
பனிமூட்டத்தால் மேற்கு வங்கத்தில் விபத்து: உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவு!!
டிராகன் பழ வகைக்கு கமலம் என பெயர் மாற்றம் செய்தது குஜராத் அரசு... அரசியல் ஏதும் இல்லை என முதல்வர் விளக்கம்!!
தீர்வு எட்டப்படுமா?: டெல்லியில் விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையேயான 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது..!!
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!