தென்ஆப்பிரிக்கா வீரருக்கு கொரோனா: இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஒத்திவைப்பு
2020-12-04@ 16:37:14

கேப்டவுன்: இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த முதல் ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றி, தென்ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆக்கியது. அடுத்ததாக இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் போட்டி பகலிரவு ஆட்டமாக கேப்டவுனில் இன்று நடைபெற இருந்தது.
உலக சாம்பியனான இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கன், பட்லர், பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், ஜோ ரூட் என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. பென்ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சில் மார்க்வுட்,கிறிஸ் வோக்ஸ், அடில்ரஷித் இடம் பெற்றுள்ளனர். மறுபுறம் டிகாக் தலைமையிலான தென்ஆப்ரிக்க அணியில் பவுமா,டேவிட் மில்லர், கிளஸ்சன் உள்ளிட்டோர் உள்ளனர். காயம் காரணமாக ரபாடா இடம்பெறவில்லை.
டி20 தொடரை இழந்த நிலையில் ஒருநாள் தொடரை வென்று பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் தென்ஆப்ரிக்கா களம் காண்கிறது. இரு அணிகளும் இதுவரை 63 ஒருநாள் போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 28ல் இங்கிலாந்து, 30ல் தென்ஆப்ரிக்கா வென்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 4 போட்டி கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
விஜய் ஹசாரே டிராபி விதர்பாவை வீழ்த்தியது தமிழகம்
ஐசிசி டெஸ்ட் தரவரிசை 3வது இடத்துக்கு முன்னேறினார் அஷ்வின்: முதல் முறையாக ரோகித் 8வது ரேங்க்
ஐஎஸ்எல் அரையிறுதியில் யார்? கோவா-ஐதராபாத் இன்று மோதல்
கிரிக்கெட் பிட்ஸ்
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் பும்ரா இல்லை
அடிலெய்டு மகளிர் டென்னிஸ் போலாந்தின் இகா சாம்பியன்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்