கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை!!
2020-12-04@ 14:19:06

சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர் உள்பட 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், “தமிழகத்தில் இதுவரை 20 இடங்களில் மிக கன மழையும், 50 இடங்களில் கன மழையும் பதிவானது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2% குறைவாக பெய்துள்ளது. நேற்று வரை 16 சதவீதம் வரை குறைவாக இருந்த நிலையில் ஒரே நாளில் 14 சதவீதம் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. மன்னார் வளைகுடாவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலையில் தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி கேரளாவை நோக்கி நகரும். தஞ்சலாய் இதனால் கடலூர்,நாகை, திருவாரூர் , ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிக கனமழை தொடரும்” என்றார் .
தொடர்ந்து பேசிய அவர், “தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, சேலம், நாமக்கல், கரூர்,கள்ளக்குறிச்சி, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும். அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை சூறைக்காற்று வீசக்கூடும். தமிழகத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 36 செ.மீ மழை பதிவாகியுள்ளது,' என்றார்.
மேலும் செய்திகள்
ஆதாரங்களுடன் ரூ.50,000 மேல் பணத்தை எடுத்துச் செல்லலாம்: ஆதாரமில்லாததை ஆணையம் பறிமுதல் செய்யலாம்...ஐகோர்ட் உத்தரவு.!!!
ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? : டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!!
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பது வெட்கக்கேடானது : தமிழக எம்.பி.க்கள் ஆவேசம்!!
மத்திய அரசு உடனடியாக சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்...! வைகோ வலியுறுத்தல்
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா!: சென்னை அண்ணா சாலையில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் பாடல் பாடி வாழ்த்து..!!
அரசு கல்வி நிறுவனங்களில் அனைத்து ஆவணங்களையும் தமிழ் மொழியில் மட்டுமே கையாள வேண்டும்...! உயர்கல்வித் துறை உத்தரவு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்