SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரியில் களை கட்டியது கிறிஸ்துமஸ்: அலங்கார மின்விளக்குகள், வண்ண ஸ்டார்கள் விற்பனை தீவிரம்

2020-12-03@ 21:19:23

நாகர்கோவில்: இயேசுகிறிஸ்துவின் பிறந்த நாளை ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கோலாகலமாக ெகாண்டாடி வருகின்றனர். சில நாடுகளில் ஒரு மாதம் பண்டிகை காலமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடி வருகின்றனர். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை டிசம்பர் மாதத்தின் தொடக்கம் முதல் மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு தயாராக தொடங்கி விடுவர். வீடுகளை அலங்கரிப்பது, வர்ணம் தீட்டுவது, மின் விளக்குகளால் அலங்கரிப்பது. ஸ்டார் போட்டு மின் விளக்கு அலங்காரம் செய்வது.

மேலும் கிறிஸ்துவின் பிறப்பை வெளிப்படுத்தும் வகையில் வீடுகளில் தருவை புற்கள் வாங்கி குடில் அமைத்து அதில் சிற்பங்களை வைத்து மின் விளக்குகளால் அலங்கரிப்பது என டிசம்பர் மாதத்தை கிறிஸ்துமஸ் மாதமாக மக்கள் கொண்டாடுகின்றனர். இதேபோல் புத்தாடை எடுப்பது, கேக் வகைகள் ஆர்டர் செய்வது, பட்டாசுகள், அலங்கார பொருட்கள் வாங்குவது என்று மக்கள் பிஸியாகி விட்டனர். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு, புயல் என்று மக்களை வாட்டி வரும் நிலையில் கிறிஸ்துமஸ் முன்னேற்பாடுகள் மந்தமாக உள்ளது. என்றாலும் வீடுகளை அலங்கரிப்பது, வர்ணம் தீட்டுவது என்று பல்வேறு பணிகளை தொடங்கி உள்ளனர்.

இதற்கேற்றார் போல் கடைகளில் பல்வேறு வண்ணங்களில் புதுரக ஸ்டார்கள், அலங்கார விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகளை அலங்கரிக்கும் பலவண்ண காகிதங்கள், காகித பூக்கள், பல வண்ண மின் விளக்குகளும் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பீதிக்கு மத்தியிலும் மக்கள் கடைகளுக்கு வந்து பொருட்களை வாங்கி வீடுகளை அலங்கரித்து வருகின்றனர்.

ஆலயங்களில் தூய்மை பணி
கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டு தலங்களை திறக்கவும், நிகழ்ச்சிகள் நடத்தவும் அரசு அனுமதித்துள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள், சிஎஸ்ஐ சர்ச்சுகள், லுத்தரன் மிஷன்,  லண்டன் மிஷன் சர்ச்சுகள், பெந்தேகொஸ்தே ஜெபக்கூடங்கள் என அனைத்து  ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக தூய்மை மற்றும் அலங்காரம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் வர்ணம் தீட்டுவது, ஸ்டார் போடுவது, அலங்கார மின் விளக்குகள் அமைப்பது ேபான்ற பணிகளை செய்து வருகின்றனர்.

கேரல் ரவுண்ட்ஸ் நடக்குமா?
கிறிஸ்துமஸ் பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சியாக கேரல் ரவுண்ட் உள்ளது. கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லும் வகையில் பாடல்குழுவினர் வீடு வீடாக சென்று பாடல்களை பாடுவதோடு இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பது வழக்கம். கொரோனா காரணமாக இந்த ஆண்டு கேரல் ரவுண்ட்ஸ் நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்