SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாப்பு எவ்வளவு அடிச்சாலும் மப்பு ஏறலியே.... விலை உயர்ந்த டாஸ்மாக் மது திருட்டு: சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

2020-12-03@ 21:18:25

நாகர்கோவில்: மதுபான கடைகள் தனியார் வசம் இருந்தபோது, பிரபல மது நிறுவனங்களின் பெயர்களில் அச்சு அசலாக போலி மது விற்பனை செய்யப்படுகிறது. மதுபிரியர்கள் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்ற காரணத்தை கூறி மதுக்கடைகளை அரசே டாஸ்மாக் மூலம் நடத்தி வருகிறது. இதில் வருவாய் எகிறியதால், தற்போது ஆண்டு தோறும் இலக்கு வைத்து மது விற்பனையை பெருக்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் லோ மற்றும் ஆர்டினரி மது பாட்டில்கள் சில ரூ.97, 87 என்ற விகிதத்தில் இருந்தது. இதனால் கடைகளில் விற்பனையாளர்கள் சில்லறை எனக் கூறி வந்தனர்.

இதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கவே படிப்படியாக பெரும்பாலான கடைகளில் ரவுண்டாக பணம் வாங்கினர். இதனை தடுக்க அரசு மதுபாட்டில்களின் விலையை ரவுண்டாக மாற்றியது. இதனால் சற்றும் சளைக்காத டாஸ்மாக் ஊழியர்களும், குவாட்டருக்கு ரூ.5ம், ஆப் பாட்டிலுக்கு ரூ.10ம், புல் பாட்டிலுக்கு ரூ.20ம் பீர் பாட்டிலுக்கு ரூ.10ம் கூடுதலாக வாங்கி வருகின்றனர். தற்போது டாஸ்மாக் உயர் அதிகாரிகள் வரை கடை வாரியாக கட்டாய மாமூல் வசூலில் இறங்குவதாக தெரிகிறது. இதனால் அனைத்து கடைகளிலும், கூடுதல் விலை கட்டாயமாக்கப்பட்டு விட்டது.

இதை அறிந்த அரசும் மதுக்கடைகள் காப்பீட்டை கைவிட்டதுடன், மின்கட்டணம் (குறிப்பிட்ட தொகைக்கு மேல்), கூடுதல் கடை வாடகை (பார் இல்லாத கடைகளில்), உடையும் மதுபாட்டில்கள் செலவு என்று பலவவையான செலவுகளை கடை விற்பனையாளர்களின் தலையில் கட்டிவிட்டது. இதனால் டாஸ்மாக கடைகளில் தில்லு முல்லு முன்பைவிட அதிகரிக்க தொடங்கி விட்டது. இந்த நிலையில் ஒரு சில கடைகளில் மதுபாட்டில் மூடிகளை லாவகமாக கழட்டி, அதில் உள்ள கால்வாசி மதுவை வேறு காலிபாட்டிலில் நிரப்பி, பின்னர் தண்ணீரை நிரப்பி வைத்து விற்பனை ெசய்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் விலை குறைந்த மதுபாட்டில்களில், இந்த கைவரிசையை காட்டி, பாரில் 2வது முறை மது அருந்துபவர்களுக்கு விற்பனை செய்து வந்தனர். தற்போது ஒரு சிலர் விலை உயர்ந்த பிரீமியம் மதுபாட்டில்களில் தங்கள் கைவரிசைகளை காட்டி வருவதாக கூறப்படுகிறது. பிளாஸ்டிக் மூடி, இரு வகை ஸ்டிரிப் இருப்பதால், எந்த வகையிலும், இந்த மதுபாட்டில்களில், மதுவை திருட முடியாது என்பது மதுபிரியர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் சில நேரங்களில், இதுபோன்ற விலை உயர்ந்த மதுவை அருந்திய மதுபிரியர்கள், மாப்பு இன்னிக்கு எவ்வளவு அடிச்சாலும் மப்பு ஏறலியே, நம்ம லெவல் கூடிபோச்சோ என்று புலம்பினர்.

சிலருக்கு சந்தேகம் வந்தாலும், ச்சே இதுபோன்ற பாட்டிலில் எப்படி? மதுவை திருடி தண்ணீர் கலக்க முடியும் என்று தனக்கு தானே ஆறுதல் பட்டனர். இந்த நிலையில், மதுபானம் ஏற்றி வரும் சரக்கு வாகனத்தில் டிரைவரும், அதன் கிளீனரும், விலை உயர்ந்த மதுபாட்டிலில் (புல் பாட்டில்) லாவகமாக மூடியை திறந்து, காலிபாட்டிலில் மதுவை மாற்றி விட்டு, பின்னர் தண்ணீர் கலந்து, மதுபாட்டிலின் மூடியை கையால் வேகமாக அடித்து முன்பு போல் மூடி துடைத்து வைக்கிறார்.
இதேபோல் ஒரு பெட்டி முழுவதும் வைக்கிறார். இந்த வீடியோ சம்மந்தப்பட்ட டிரைவருக்கு தெரிந்தே எடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இது எந்த மாவட்டத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் இந்த வீடியோ மூலம் சில கடை விற்பனையாளர்கள் மட்டுமின்றி மதுபாட்டில்கள் ஏற்றிச் செல்லும், வாகன ஊழியர்களும் மது திருட்டில் ஈடுபட்டு, மதுபிரியர்களின் போதையில் “கை வைத்து “ வருவது தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-01-2021

  28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • jayallithaa_mmeerrr

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

 • 27-01-2021

  27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramukudi

  குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

 • autoooo_maaa

  சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்