SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடலூரில் தொடரும் அவலம்; பாழடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்புகளில் விஷஜந்துகள் நடமாட்டம்: புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

2020-12-03@ 20:43:35

நெய்வேலி: வடலூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் வடலூர் வள்ளலார் சபை வளாகத்தில் எதிரில் அமைந்துள்ளது. இங்குள்ள வடலூர் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இங்கு பணிபுரியும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் அரசு சார்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு  குடியிருப்பு கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கட்டிடம் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படு கிறது. இதனால் கட்டிடம் சுற்றி செடிகள் வளர்ந்து புதர் போல் காணப்படுகிறது. இந்த பாழடைந்த கட்டிடங்களில் பூச்சி பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் புகலிடமாக மாறி விட்டது.

இதனால் அதன் அருகில் குடியிருந்து வரும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர். மேலும் குழந்தைகள் அப்பகுதியில் விளையாடும் நேரங்களில் ஏதேனும் விஷ ஜந்துகள் கடித்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இங்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் பயனற்ற நிலையில் கிடக்கும் பாழடைந்த கட்டிடத்தை அகற்ற வேண்டுமென குடியிருப்பு வாசிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் அதிகாரிகள் பாழடைந்த நிலையில் கிடக்கும் கட்டிடத்தை அகற்ற வேண்டுமென்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்