பசுக்களை குளிரிலிருந்து பாதுகாக்க சிறப்பு கோட்டுகள்.. : உத்தரபிரதேச அரசு உத்தரவு..!
2020-12-03@ 17:10:24

லக்னோ : பசுக்களை குளிர்கால குளிர்ச்சியிலிருந்து காப்பாற்ற சிறப்பு கோட்டுகளை வழங்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத் பசுக்களின் நல்வாழ்வைப் பற்றி மிகுந்த அக்கறை கொண்டவர் ஆவார். இந்துக்களுக்கு புனிதமாகக் கருதப்படும் பசுக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது அரசின் கடமை என்பது அவரது நிலைப்பாடு,
இந்த நிலையில், குளிர்கால மாதங்களில், மாநில அரசு நடத்தும் பசு முகாம்களில் உள்ள மாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கால்நடை பராமரிப்புத் துறை பல்வேறு மாவட்டங்களில் உள்ள கால்நடை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து சணல் பைகளால் செய்யப்பட்டு, மாடுகளை சூடாக வைத்திருக்கும் கோட்டுகளுக்கான ஏற்பாடுகளை தற்போது கால்நடை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
அது மட்டுமல்லாது, பசு முகாம்கள் தடிமனான பாலிதீன் திரைச்சீலைகள் அல்லது டார்பாலின் கொண்டு மூடப்பட்டிருக்கும். இதனால் குளிர்ந்த காற்று உள்ளே நுழையவே நுழையாது.தடிமனான திரைச்சீலைகள் மற்றும் அட்டைகளை உருவாக்க சணல் பைகள் ஒன்றாக தைக்கப்படுகின்றன. குளிர்காலத்தில் சூடாக இருக்க மாடுகள் அணியும் மாட்டு கோட்டுகளை தயாரிக்கவும்.இந்த சணல் பைகள் பயன்படுத்தப்படும்.
மேலும் செய்திகள்
அச்சப்பட தேவை இல்லை...சசிகலாவிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.: டிடிவி தினகரன் பேட்டி
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தலைவர்கள் இதயம் கனிந்த வாழ்த்து..!!
இந்தியாவில் கொரோனா: மேலும் 15,223 பேர் பாதிப்பு: 151 பேர் உயிரிழப்பு
சசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை: RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதிக்கு தான் உச்சபட்ச அதிகாரம்: மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில்
நடுவானில் மூச்சு திணறல் 7 வயது உபி சிறுமி பலி
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்