கோவையில் ரூ.1,620 கோடி மதிப்பில் 10 கி.மீ. தொலைவில் உயர்மட்ட பாலம்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
2020-12-03@ 17:03:11

கோவை: கோவையில் ரூ.1,620 கோடி மதிப்பில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்டத்திற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கேட்ட திட்டங்களை எல்லாம் கொடுத்தார்கள். அதனைபோல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி 50 ஆண்டுகளுக்கு இல்லாத வளர்ச்சியை இந்த 5 ஆண்டு காலத்தில் கொடுத்துள்ளார். கோவை மாவட்ட மக்களின் 60 முதல் 70 ஆண்டுகள் இருக்ககூடிய நீண்ட நாள் எதிர்பார்ப்பை முதல்வர் பழனிசாமி பூர்த்தி செய்துள்ளார். அவணாசி சாலையில் நீண்ட காலமாக மேம்பாலம் அமைய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
முக்கிய நிகழ்வின்போது, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் வழியாக கோவைக்கு வரக்கூடிய வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதனால், இங்குள்ள மக்கள் நீண்ட காலமாக இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை பூர்ச்சி செய்யும் விதமாக கடந்த 2014-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னரும் முதல்வர் பழனிசாமியுடம் கோரிக்கை வைத்தோம்.
இதனையடுத்து, உயர்மட்டம் மேம்பாலத்திற்கு ரூ.1,620 கோடி நிதி ஒதுக்கீ முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சென்னையில் இருந்தப்படி அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து விரைவில் பணியை தொடங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து, இன்று உயர்மட்டம் பாலம் பணிக்கு பூமி பூஜை தொடங்க வைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் செய்திகள்
கொரோனா காரணமாக சுற்றுலாதலங்களுக்கு தடை புலிமேடு நீர் வீழ்ச்சியை காண குவிந்த பொதுமக்கள்
தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மல்டி வைட்டமின், ஜிங்க் மாத்திரை: சுகாதாரத்துறையினர் வழங்க நடவடிக்கை
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
திருவூடல் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
ஓசூர் அருகே நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கன்டெய்னர் லாரி மோதி காட்டு யானை படுகாயம்: வனத்துறையினர் மீட்டு தீவிர சிகிச்சை
இறக்குமதி இல்லாததால் எகிறியது விலை 9 மாதங்களில் இரும்பு கம்பி டன்னுக்கு 20 ஆயிரம் உயர்வு: கட்டுமான பணிகள் சுணக்கம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்