SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லி விவசாயிகள் போராட்டம்: வேளாண் அமைச்சர் தலைமையில் விவசாய சங்க தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை; சட்டம் ரத்து செய்யப்படுமா?

2020-12-03@ 15:38:08

டெல்லி: வேளாண் சட்டங்கள் பற்றி விவசாய சங்க தலைவர்கள் மற்றும் மத்திய வேளாண் அமைச்சர் தலைமையில் டெல்லியில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறத. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 8வது நாளாக இந்த போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது. மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் விவசாயிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது.

இதேபோன்று விவசாயிகள் சார்பில் 35க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், மத்திய வேளாண் அமைச்சர் என்.எஸ். தோமர் தலைமையில் இன்று விவசாய சங்க தலைவர்களை சந்திப்பதற்கு முடிவானது. இதன்படி, 35க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டு உள்ளது. இதற்கு ஒருதரப்பு விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.  அனைத்து 507 விவசாய அமைப்புகளின் தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து கூட்டம் நடத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

அப்படி ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளாதவரை மத்திய அரசின் எந்தவொரு பேச்சுவார்த்தை கூட்டத்திலும் நாங்கள் கலந்து கொள்ள போவதில்லை என்று கூறினர். விவசாய தலைவர்களுடனான பேச்சுவார்த்தை கூட்டம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கியுள்ளது.  இதில், மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அரசு பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-gold25

    அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!

  • 25-01-2021

    25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-01-2021

    24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-01-2021

    22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • argentina21

    ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்