தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை: மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
2020-12-03@ 15:23:55

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் புரெவி புயல் எதிரொலியாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புரெவி புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அணைகள் மற்றும் குளங்களின் கரை உறுதித்தன்மையை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றால அருவி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதி என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
டிரோன் கேமரா மூலம் 10 இடங்களில் ஆய்வு வெள்ளத்தால் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், வாழைகள் நாசம்: கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது
தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி படுகாயமடைந்த யானைக்கு தொடர் சிகிச்சை: லாரி டிரைவர் மீது வழக்கு
கொடைக்கானலில் மழை குறைந்தது இயல்பு நிலைக்கு திரும்பிய ‘இளவரசி’: சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்
வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் தாமதமாகும் கால்வாய் நடைபாதை பணியால் மக்கள் கடும் அவதி
கடலூர் பாதாள சாக்கடை திட்டத்தில் குளறுபடிகள்
கொரோனா காரணமாக சுற்றுலாதலங்களுக்கு தடை புலிமேடு நீர் வீழ்ச்சியை காண குவிந்த பொதுமக்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்