கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி வெளிச்சந்தையில் கிடைக்க ஏற்பாடு!: மார்ச் - ஏப்ரலில் விற்பனைக்கு வரும் என சீரம் தகவல்..!!
2020-12-03@ 14:56:28

டெல்லி: கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்தினை வரும் மார்ச் முதல் வெளிச்சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர இந்தியாவின் சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட முன்னணி நாடுகள் பலவும் தடுப்பூசிகளை உருவாக்கி அவற்றை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து வருகின்றன. இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இறுதிக்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மீது உலகளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், 2011ம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முழு அளவில் பயன்பாட்டிற்கு தயாராகிவிடும் என்று தயாரிப்பு மற்றும் விநியோகம் உரிமம் பெற்றுள்ள இந்தியாவின் சீரம் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பெரு நிறுவனங்கள் பல தங்களது தொழிலாளர்களுக்காக அதிகளவில் தடுப்பூசி மருந்தை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக சீரம் கூறியுள்ளது. தடுப்பூசி மருந்துக்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்ததும் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் முதல் அதனை வெளிச்சந்தையிலும் விற்பனைக்கு கொண்டுவர சீரம் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதனிடையே இரண்டுக்கட்ட சோதனைகளை கடந்து மூன்றாம் கட்ட சோதனையின் இறுதியில் இருப்பதால் கோவிஷீல்டு மருந்தை அவசர பயன்பாட்டிற்கு அனுமதி தரக்கோரி சீரம் நிறுவனம் இந்திய அரசிடம் முறையிட இருக்கிறது.
மேலும் செய்திகள்
கோட்டயத்தில் பரபரப்பு; அறையில் அடைத்து பெற்றோருக்கு உணவு கொடுக்காமல் சித்ரவதை: தந்தை மரணம்; தாய்க்கு சிகிச்சை- கொடூர மகன் மீது வழக்குப்பதிவு
புனேவில் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து...! 5 பேர் உயிரிழப்பு: சீரம் நிறுவனத்தின் சிஇஓ இரங்கல்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நிதி...! மேற்கு வங்க ஆளுநர் ரூ.5 லட்சம் நன்கொடை
புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனத்தில் தீ விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்..!
எந்த தடுப்பூசியாக இருந்தாலும் பக்க விளைவுகள் இருப்பது பொதுவானது: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேட்டி
அடுத்த அதிரடி!: ஆந்திராவில் வீடுவீடாக சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..!!
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!