SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடு முழுவதும் டிசம்பர் 5ல் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெறும் : டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் அறிவிப்பு!!

2020-12-03@ 14:34:07

டெல்லி : வரும் டிசம்பர் 5-ம் தேதி நாடு முழுவதும் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட வட  மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 27-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. தொடர்ந்து 8வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டம் டெல்லியில் தொடர்கிறது. மத்திய அரசு அவர்களிடம் நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஆனாலும், வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் லாரி ஸ்டிரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.இதனிடையே, டிசம்பர் 5-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும், அன்றைய தினம் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்படும் என்றும் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள் இளைஞர்கள், அரசியல் கட்சியினர் ஆதரவு அளித்துள்ளதால் டிச-5 ம் தேதி பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • argentina21

    ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

  • jo-21

    அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்