காட்டு யானைகள் தாக்கி குடியிருப்புகள் சேதம்
2020-12-03@ 14:22:44

பந்தலூர்: பந்தலூர் அருகே தேவாலா அரசு தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புகளை காட்டு யானைகள் உடைத்து சேதம் செய்தது. பந்தலூர் அருகே தேவாலா அரசு தேயிலைத்தோட்டம் (டேன் டீ) சரகம் 5ஏ பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து டேன் டீ தொழிலாளி யோகேஷ்வரி என்பவரது வீட்டின் முன்புற கதவு மற்றும் சுவரினை உடைத்து சேதம் செய்தது. வீட்டில் இருந்த குழந்தைகள் கூச்சலிட்டதில் யானைகள் அங்கிருந்து நகர்ந்து ஜெயக்கொடி மற்றும் முருகையா ஆகியோரின் வீட்டின் கதவுகளை உடைத்து சேதம் செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை நேற்று கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி நேரில் சென்று ஆறுதல் கூறி உதவினார். மேலும் சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் டேன்டீ தேயிலைத்தோட்டம் அதிகாரிகளை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். தொழிலாளர்கள் கூறுகையில் ‘‘இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். மேலும் இப்பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் யானை நடமாட்டம் குறித்து தெரிந்து கொள்ளமுடியாமல் உள்ளது.
மேலும் குடியிருப்புகளுக்கு அருகே கழிப்பறைகள் இருப்பதால் இரவு நேரங்களில் மக்கள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு வெளியே செல்லும்போது வனவிலங்குகள் மனித மோதல் ஏற்படுகின்றது. சில குடியிருப்புகளுக்கு கழிப்பறை வசதி இல்லாததால் மக்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்.
Tags:
காட்டு யானைகள்மேலும் செய்திகள்
கடலூர் மாவட்டம் வேப்பூரில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 40 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கின!: தேர்தல் பறக்கும் படை அதிரடி..!!
வனப்பகுதி நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை கோரி வழக்கு
யாரிடமும் நாம் கெஞ்சவில்லை தேமுதிகவிடம்தான் அதிமுக கெஞ்சுகிறது: எல்.கே.சுதீஷ் கெத்து
கொடைக்கானலில் காட்டுத்தீ
துறைமுகம் அமைக்கும் திட்டம் அதானிக்கு தாரைவார்ப்பா? குமரியை அழிக்கும் திட்டம் கைவிடாவிட்டால் போராட்டம்: எதிர்ப்பு இயக்கத்தினர் அறிவிப்பு
அவசரகதியில் முதல்வர் எடப்பாடி தொடங்கிய மேட்டூர் உபரிநீர் திட்டத்திற்காக அணையின் கரை உடைப்பு
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!