கடும் எதிர்ப்புகளுக்கு இடையே பொதிகையில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பு இன்று அமலானது!!
2020-12-03@ 13:01:23

சென்னை : பொதிகையில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பு இன்று அமலானது. அண்மையில் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், தூர்தர்ஷனில் தினமும் காலை 7.15 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் ஒளிபரப்பாகும் சமஸ்கிருத செய்திகளை அனைத்து மாநிலங்களும் ஒளிபரப்ப வேண்டும் என்றும் சனிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படும் வாராந்திர செய்தி தொகுப்பை ஒளிபரப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பாமக தலைவர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘கேட்க ஆளே இல்லாத ஒரு மொழிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.இதனிடையே பொதிகை டி.வி.யில் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு தினமும் 15 நிமிடம் ஒதுக்கியதற்கு எதிராக உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்ப்புகளை மீறி, பொதிகையில் 15 நிமிட சம்ஸ்கிருத செய்தி ஒளிபரப்பு இன்று அமலானது. தினசரி காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் செய்தி 7 மணிக்கு மாற்றப்பட்டு, முதல் 15 நிமிடம் தமிழ் செய்தியும், அடுத்த 15 நிமிடம் சமஸ்கிருத செய்தியும் ஒளிபரப்பானது.
மேலும் செய்திகள்
அரசியலில் ஒரு குடும்பத்தில் 1 உறுப்பினர்: நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவர முடியுமா?...பிரதமர் மோடிக்கு மம்தா மருமகன் சவால்.!!!
இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்து : 'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு
கட்சிக்கு எதிராக துரோகம் இழைத்ததால் நடவடிக்கை!: காங்கிரசில் இருந்து புதுவை அமைச்சர் நமசிவாயம் தற்காலிக நீக்கம்..!!
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாவது உறுதி..! விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்: பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல்
வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது என்பதை அனைவரும் உணரவேண்டும்...! டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து
வாக்களிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை வாக்காளர்களிடம் ஏற்படுத்த வேண்டும் : தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பிரதமர் மோடி அட்வைஸ்!
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!