புதுவை ஜிப்மர் மருத்துவமனை லிப்டில் சிக்கி முதல்வர், அமைச்சர் தவிப்பு
2020-12-03@ 02:32:34

புதுச்சேரி: புதுச்சேரி கலெக்டரும், சுகாதாரத்துறை செயலருமான அருண் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக கோவிட் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. பின்னர், மருத்துவர்கள் ஆலோசனையின்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜிப்மர் கோவிட் பிரிவில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், தலைமை செயலர் அஸ்வனிகுமார் ஆகியோர் நேற்று மாலை ஜிப்மருக்கு வந்தனர். மூன்றாவது தளத்துக்கு லிப்ட்டில் சென்றபோது, திடீரென லிப்ட் பழுதாகி நின்றது. இதனால் அவர்கள் வெளியே வர முடியாமல் 30 நிமிடம் லிப்ட்டின் உள்ளே சிக்கி தவித்தனர். ஊழியர்கள் லிப்ட்டின் கதவை உடைத்து மூன்று பேரையும் மீட்டனர். அதன்பிறகு, மற்றொரு லிப்ட்டில் ஏறி சென்று கலெக்டரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
மேலும் செய்திகள்
ராமதாசின் சகோதரர் காலமானார்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார துறை செயலாளர்
தமிழக - கர்நாடக எல்லையில் மீண்டும் பெயர் பலகைகள் சேதம்
மதுரையில் நடந்த திருமணத்தில் புதுமுயற்சி ‘க்யூ.ஆர் கோடை’ ஸ்கேன் செய்தால் மொய் பணம் அக்கவுன்ட்டில் ஏறும்
புதுச்சேரி பாஜ நியமன எம்எல்ஏ சங்கர் மாரடைப்பால் மரணம்
கன்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த யானை சாவு
18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்