புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல்: ரவுடி படுகாயம்
2020-12-03@ 02:32:01

காலாப்பட்டு: புதுச்சேரி சிறைக்குள் அடிக்கடி கைதிகளுக்கு இடையே மோதலும் ஏற்பட்டு வருகிறது. இதனால் முக்கிய ரவுடிகள் 5 பேரை வேறு மாநில சிறைக்கு மாற்ற சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் கொலை வழக்கு விசாரணை கைதியான வில்லியனூர், உத்திரவாகினிபேட்டை சேர்ந்த ரவுடி பாம் ரவி தனது அறையில் படுத்திருந்தார். அப்போது குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு தகடுகளுடன் அங்கு வந்த பிரபல ரவுடிகள் தடி அய்யனார், அஜித்குமார், தாடி அய்யனார் என்ற ராஜதுரை ஆகியோர் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
பதிலுக்கு அவரும் தாக்குதலில் ஈடுபட்டதால், பதற்றமான சூழல் நிலவியது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறை வார்டன்கள் மோதலை தடுத்து பாம் ரவியை அக்கும்பலிடமிருந்து காப்பாற்றினர். படுகாயமடைந்த அவருக்கு சிறைச்சாலைக்குள் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தகவலறிந்து அங்கு வந்த சிறைத்துறை கண்காணிப்பாளர் கோபிநாத் விசாரித்தார். அவரது புகாரின்படி காலாப்பட்டு போலீசார் 3 கைதிகள் மீதும் 2 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர். மாஜிஸ்திரேட் ஒப்புதல் பெற்று சிறைக்கு சென்ற காலாப்பட்டு போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் செய்திகள்
சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு விழா யாருக்கு? குமரியில் குண்டும் குழியுமான சாலைகள்: “ஊருக்குத்தான் உபதேசம்” பொது மக்கள் குற்றச்சாட்டு
கன்னியாகுமரி விவேகானந்தர் - திருவள்ளுவர் பாறை இடையேயான இணைப்பு பாலத்துக்கு ஒதுக்கிய ரூ15 கோடி எங்கே?.. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அமெரிக்க துணை அதிபராக பதவி ஏற்பு: கமலா ஹாரிசின் சொந்த ஊரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
வைகை அணை நீர்மட்டம் உயர்ந்ததால் நீரில் மூழ்கிய விளைநிலங்கள்: பயிர்கள் நாசம்
மழையால் பாதித்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி எம்ஜிஆர் சிலையிடம் விவசாயிகள் மனு அளித்து ஒப்பாரி போராட்டம்
சிவகாசி அருகே வறண்டு கிடக்கும்‘அனுப்பன்குளம் கண்மாய்’: விவசாயிகள் கவலை
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!