சீன ஆளில்லா விண்கலம் நிலவில் தரையிறங்கிபாறை துகள் சேகரிப்பு
2020-12-03@ 02:27:32

பிஜீங்: சீனா செலுத்திய ஆளில்லா விண்கலமான சாங்க் இ- 5 வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி பாறைத் துகள்களை சேகரித்துள்ளது. நிலவில் விண்கலத்தை அனுப்பி அங்குள்ள பாறைக்கற்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு எடுத்து வந்து அய்வு செய்வதற்காக சீனா திட்டமிட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 24ம் தேதி சாங்க் இ -5 எனும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை சுமந்து சென்ற லேண்டர் நேற்று முன்தினம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிலையில் இந்த விண்கலமானது நிலவின் மேற்பரப்பில் உள்ள பாறை கற்களை சேகரிக்க தொடங்கியது.
சீன நேரப்படி நேற்று அதிகாலை நிலவின் மேற்பரப்பில் சுமார் 2 மீட்டர் ஆழத்திற்கு துளையிட்டு, விண்கலம் பாறைத் துகள்களை சேகரித்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சேகரித்த மாதிரிகளுடன் விண்கலம் மீண்டும் பூமியை வந்தடையும். இதுவரை அறியப்படாத பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ எடையுள்ள பாறை துகள்களை இந்த விண்கலம் சேரித்து எடுத்து வரும். சீனாவின் இந்த திட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தால், நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து வந்த மூன்றாவது நாடு என்ற பெயரை சீனா பெறும். ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை நிலவின் மாதிரிகளை சேகரித்து எடுத்துவந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
எனக்கு என்ட் கார்டே கிடையாது... 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிடலாம் : தோல்விக்கு பிறகு மவுனம் கலைத்த அதிபர் டிரம்ப்!!
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி..உச்சக்கட்ட பதற்றம்..!!
வீரியம் குறையாத கொரோனா வைரஸ்...! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது: 25.42 லட்சம் பேர் உயிரிழப்பு
மியான்மரில் போராட்டத்தை ஒடுக்க முயற்சி போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு
மியான்மரில் போராட்டத்தை ஒடுக்க முயற்சி போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு
ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி..!
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்