SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உண்மையிலே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வாங்கி தரும் எண்ணமில்லை அறக்கட்டளை சொத்துகளை தனதாக்கவே ராமதாஸ் போராட்டம் நடத்துகிறார்: வேல்முருகன் பகீர் பேட்டி

2020-12-03@ 00:38:45

சென்னை: தேர்தல் நேரத்தில் ராமதாஸ் திடீரென ேபாராட்டம் நடத்துவது ஏன் என்று தமிழக வாழ்வுரிமை  கட்சி தலைவர் ேவல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:  வன்னியர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்புக்கான கோரிக்கை என்பது நியாயமானது. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் கோரிக்கைக்காக இப்போது போராட்டம் என அறிவிக்கக்கூடிய ராமதாஸ், உண்மையிலே அந்த வன்னியர்களுக்கான ஒரு போராட்டமாக நடத்தாமல் தனக்கான சீட்டு மற்றும் ஓட்டு பேரத்தை அதிகரிப்பதற்காகத் தான் இந்த போராட்டத்தை தற்போது நடத்துகிறார்.  தனது மகன் மத்திய அமைச்சராக இருந்தபோது மருத்துவ துறையில் ஏற்பட்ட ஊழல், கேதர் தாசாயிடம் பிடிபட்ட ஒன்றரை டன் தங்கம், ஆயிரம் ேகாடி ரூபாய் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால் வசதியாக மத்திய அரசின் இடஒதுக்கீட்டை மறந்து விட்டனர். இப்போது இங்கிருக்கிற எடப்பாடி அடிமை அரசை மிரட்டி நோட்டையும் சீட்டையும் பெறுவதற்கான ஒரு உத்தியாக போராட்டம் நடத்துகின்றனர். மேலும் அதிமுக கூட்டணிக்கு இவர் வருவதற்கு முன்பாக தமிழகத்தில் உள்ள வன்னியர் சொத்துக்களை எல்லாம் ஒருங்கிணைத்து வன்னியர் நல வாரியம் என்று கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டு, தற்போது அதிமுக ஆட்சியில் அதன் நீட்சியாக பல்வேறு வன்னியர் சொத்துக்களை இனங்கண்டு அதை வன்னியர் நல வாரியத்தின் கீழ் கொண்டு வருகின்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதற்கான சட்டத்துக்கு மத்திய அரசும், ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தனர். அதன் பின்பு ராமதாஸ் வன்னியர்களிடம் இருந்து வசூல் செய்து உருவாக்கிய வன்னியர் கல்வி அறக்கட்டளை கோனேரி குப்பத்தில் இயங்கி வருகின்ற கலை அறிவியல் கல்லூரி, சட்டக்கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்றவைகளும் இந்த அறக்கட்டளையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தனது குடும்ப சொத்தாக ஆக்கி அதை தானே முழுவதுமாக அனுபவித்துக் கொள்கிற வகையில், ராமதாஸ் சமீபத்தில் வன்னியர் அறக்கட்டளை என்பதை ராமதாஸ் தனது சொந்து பெயருக்கு மாற்றம் செய்து சில தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டார். இதை பல்வேறு வன்னியர் சங்க அமைப்புகளும் அரசின் கவனத்துக்கு எடுத்து சென்றது.  இதுவும் வன்னியர் சொத்து வாரியத்துக்குள் வர வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக எழுப்பினர். இதையடுத்து, அந்த பட்டியலில் இந்த சொத்துக்கள் சேர்க்கப்பட்டது.  

இன்றைக்கு இந்த போராட்டம் என்று மிரட்டுவது, வன்னியர் அறக்கட்டளை சொத்துக்களையும்,  பல இடங்களில் இருக்கின்ற கோடிக்கணக்கான சொத்துக்களை அரசு வன்னியர்களின் பொது அறக்கட்டளைக்கு கொண்டு வந்தால் நாளை நமது சந்ததிகள் உரிமை கொண்டாட முடியாமல் போய்விடும் என்ற காரணத்திற்காக மறைமுக அஜெண்டாவாக இதை வைத்துக்கொண்டு தமிழக அரசை மிரட்டுகிற ஒரு யுக்திதான் இந்த போராட்டம். அன்புமணி போராட்டத்துக்கு வருவாராம், அங்கு வரும் போது முதல்வர் தொலைபேசி மூலம் அவரை அழைப்பாராம் இது ஒரு திட்டமிட்ட நாடகம். புரிதல் இல்லாத, அரசியல் தெளிவு இல்லாத வன்னிய இளைஞர்களை மூளை சலவை செய்து தங்களுக்கான ஓட்டு வங்கியாக மாற்றி அதன் மூலம் தான் தனது குடும்ப உறவுகளும் லாபம் அடைகிற ஒப்பந்தம் தான் இந்த அழைப்பு.   வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு 15 சதவீதத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.இவர் 20% என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் நீதிமன்ற உத்தரவுபடி 15 சதவீத தனி இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு கிடைத்தாலே பயனளிக்கும். வன்னியர் சங்க கூட்டமைப்பு தமிழக அரசிடம் கேட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டனர். அடுத்து இருக்கிற ஒரேயொரு அஸ்திரம் வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு, அதை நான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இடம்பெற்ற போது திமுக தலைமைக்கு கோரிக்கை வைத்தோம்.

 அதை மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று அறிவித்தார். உண்மையிலே ராமதாசுக்கு வன்னியர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் மு.க.ஸ்டாலின் சொன்னபோது அதை வரவேற்றிருக்க வேண்டும். அதை செய்யவில்லை.    இப்போது மட்டும் எப்படி இந்த 6 மாத காலத்துக்குள் ராமதாசுக்கு ஞானோதயம் வந்தது. வன்னியர் சங்க கூட்டமைப்பு சார்பிலோ அல்லது வேல்முருகன் மூலமோ வன்னியர்களுக்கு நன்மை கிடைத்து விட்டால் ராமதாசுக்கு வாழ்வு இல்லாமல் போய்விடும்.  அன்புமணிக்கு அரசியல் செய்ய கையில் எந்தவித அஜெண்டாவும் இல்லாமல் போய்விடும். தங்களது அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிடும் என்பதை தெரிந்து கொண்டு ராமதாஸ் தற்போது இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். புரிதல் இல்லாத, அரசியல் தெளிவு இல்லாத வன்னிய இளைஞர்களை மூளை சலவை செய்து தங்களுக்கான ஓட்டு வங்கியாக மாற்றி அதன் மூலம் தான் தனது குடும்ப உறவுகளும் லாபம் அடைகிற ஒப்பந்தம் தான் இந்த அழைப்பு.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • argentina21

  ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

 • jo-21

  அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

 • 21-01-2021

  21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்