7.5 சதவீத ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி
2020-12-03@ 00:37:08

சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, கடலூரை சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, மற்றும் இலக்கியா ஆகியோருக்கு கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட்டது. இரண்டு மாணவிகளுக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தபோதும், ஆண்டு கல்வி கட்டணமாக 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மாணவிகள் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்ததால், இருவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
இதையடுத்து, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என நவம்பர் 20ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகியும் மாணவிகள் தர்ஷினி மற்றும் இலக்கியாவுக்கு மருத்துவ இடம் வழங்கப்படாததை எதிர்த்து மாணவிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இரண்டு மாணவிகளுக்கு இடம் வழங்கும் வரை, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும் என மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிட்டார்.
மேலும், கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். அப்போது, தமிழக அரசுத்தரப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் செலுத்த முடியாததால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 18-ம் தேதி திறக்கப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
தமிழகத்தில் மேலும் 596 பேருக்கு கொரோனா; 09 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.33 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.!!!
பிப்ரவரி 2-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! ஆளுநர் உரையுடன் தொடங்கும்: பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு
அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் கமல்ஹாசன்
இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி.: முதல்வர் அறிக்கை
உயிரிழந்த மீனவர்கள் 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி...! தகுதி அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!