உதவி பொறியாளர் சங்கத்தினர் ஓபிஎஸ் உடன் சந்திப்பு
2020-12-03@ 00:34:57

சென்னை: தமிழகத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்வாரியம், வேளாண்துறை, மீன்வளம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 7வது ஊதிய குழு அளித்த பரிந்துரையின் படி 10 ஆயிரம் முதல் 17 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடியை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சங்க நிர்வாகிகள் சந்திக்க சென்றனர். ஆனால், அவர்கள் முதல்வரை சந்திக்க முடியவில்லை.
இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது, ஊதிய குறைப்பு ஆணைகளை ரத்து செய்து தரும் படி கேட்டுக்கொண்டனர். அப்போது ஓபிஎஸ் இவ்விவகாரத்தில் விரைவில் தீர்வு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் பொறியாளர் சங்க நிர்வாகிகள், எம்பி வைத்திலிங்கம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, பாஸ்கரன் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து மனு அளித்தனர்.
மேலும் செய்திகள்
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எப்போது கல்லூரி திறப்பு.: 2 நாட்களில் முடிவு...அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
நடத்தையில் கணவர் சந்தேகத்தாலேயே நடிகை சித்ரா தற்கொலை செய்துள்ளார்: உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
தமிழகத்தில் மேலும் 549 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான முதல் ஆலோசனை கூட்டம்
சென்னை, கோவை உள்பட பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் ஐடி ரெய்டு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்