ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
2020-12-03@ 00:34:36

சென்னை: தொழில் கல்வி படிக்கும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியில் இருந்து படிப்பு உதவித் தொகை வழங்கப்பட உள்ளன. இதற்காக, தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் யாராவது தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு, தொழில்நுட்பப் பட்டப் படிப்பு ஆகியவை படித்தால் அவர்களுக்கு படிப்பு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது குறித்து அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தெரிவித்து வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளிக்கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை-6 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பிவைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்கள் ஆய்வு அலுவலர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.
* விண்ணப்பிக்க உள்ள ஆசிரியர்களின் மகன் அல்லது மகள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையின் கீழ் உள்ள நிறுவனத்தில் நான்காண்டு தொழில் கல்வி பட்டப் படிப்பு, அல்லது 3 ஆண்டு பட்டியப்படிப்பு படிப்பவர்களாக இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை கேட்க விரும்பும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியை முழுமையாக முடித்திருக்க வேண்டும்.
* முந்தைய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
* பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹7 லட்சத்து 20 ஆயிரம் (அடிப்படை ஊதியம் மட்டும்) இருத்தல் வேண்டும்.
* தந்தை அல்லது தாயின் பணியின் விவரம் மற்றும் அவர்களின் ஊதிய சான்று விவரங்களை கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும்.
* தந்தை அல்லது தாய் ஆசிரியராக பணியாற்றினால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
* ஓய்வு பெற்ற மற்றும் இறந்த ஆசிரியர்களின் பிள்ளைகளும் படிப்பு உதவி தொகை பெற தகுதி பெற்றவர்கள்.
மேலும் செய்திகள்
பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
நடத்தையில் கணவர் சந்தேகத்தாலேயே நடிகை சித்ரா தற்கொலை செய்துள்ளார்: உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
தமிழகத்தில் மேலும் 549 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான முதல் ஆலோசனை கூட்டம்
சென்னை, கோவை உள்பட பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் ஐடி ரெய்டு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் வரும் 28ம் தேதி திறப்பு: பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க முடிவு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்