டிடிகே.சாலையில் சைக்கிளில் சென்ற போது நடிகர் கவுதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு: அதிகாலையில் வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம்
2020-12-03@ 00:33:14

சென்னை:சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் கவுதம் கார்த்திக்(31). பழம் பெரும் நடிகர் முத்துராமனின் பேரனும், நவரச நாயகன் கார்த்திக் மகன் ஆவார். மணிரத்தினம் இயக்கிய ‘கடல்’ படம் மூலம் சினிமா துறையில் நுழைந்தார். இளம் நடிகரான இவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.கவுதம் கார்த்திக் அதிகாலையில் சைக்கிளில் உடற் பயிற்சி செல்வது வழக்கம். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். டி.டி.கே.சாலையில் செல்லும்போது, பைக்கில் பின் தொடர்ந்து வந்த வழிப்பறி கொள்ளையர்கள் நடிகர் கவுதம் கார்த்திக்கின் விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத இளம் நடிகர், வழிப்பறி கொள்ளையர்களை தனது சைக்கிளில் பின் தொடர்ந்து வேகமாக சென்றுள்ளார். ஆனால் கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் மாயமாகிவிட்டனர்.இதுகுறித்து மயிலாப்பூர் காவல்நிலையத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவம் நடந்த டிடிகே.சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பைக்கில் வந்த வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். நடிகர் ஒருவரிடம் வழிப்பறி கொள்ளையர்கள் செல்போன் பறித்து சென்ற சம்பவம் சினிமா துறையில் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
திருமண தோஷங்களை நீக்குவதாக கூறி ரூ.92 லட்சம் மோசடி
போக்சோவில் டிரைவர் கைது
சொகுசு கார் திருட்டு
மர்ம கும்பல் சுட்டுக்கொலை மெக்சிகோவில் ரோட்டில் வீசப்பட்ட 10 சடலங்கள்
செயின் பறிப்பை தடுக்க முயன்ற பெண் படுகொலை: டெல்லியில் பரிதாபம்
சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி திரைப்பட இயக்குநர் ரூ.9.5 லட்சம் மோசடி: வாலிபர் புகார்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்