SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு

2020-12-03@ 00:32:40

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் தலைவர்கள் நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் மாலை அவரது இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், துணை செயலாளர் கே.சுப்பராயன் எம்பி, செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் சுந்தரம் ஆகியோர் நேரில் சந்தித்து கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைக் காவலர்களுக்கு கடந்த மார்ச் 16ம் தேதி சட்டப் பேரவையில் அறிவித்தபடி மாதாந்திர ஊதியத்தை 3600 ஆகவும், குடிநீர் விநியோகப் பணியாளர்களுக்கு 4000 ஆகவும் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிட வேண்டும். இப்பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.அரசு ஆரம்பப் பள்ளிகளில் பயின்று வரும் அறிவுக் கூர்மையுள்ள மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்க்கவும், அதற்கான கட்டணங்களை கட்டுமான தொழிலாளர் வாரியம் செலுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டிருப்பது அரசுப்பள்ளியின் முக்கியத்துவத்தை குறைத்து விடும் என்பதால் இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும்.டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும், அவர்களை இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்கவும் வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்