10 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
2020-12-03@ 00:15:04

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதலாக 10 நீதிபதிகளை நியமித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளதையடுத்து, அவர்கள் இன்று காலை பதவி ஏற்கின்றனர். தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 75. தற்போது 53 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 22 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான பட்டியலை, உச்ச நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அதில், ‘மாவட்ட நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாத்திகுமார் சுகுமார குருப், முரளி சங்கர் குப்புராஜூ, மஞ்சுளா ராஜராஜூ நல்லய்யா, தமிழ் செல்வி டி.வளையாம்பாளையம் ஆகியோர் இடம் பெற்றனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த பரிந்துரை பட்டியலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 மாவட்ட நீதிபதிகளையும், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமனம் செய்ய, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, புதிய நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிக்கு பதவி ஏற்கின்றனர். உயர் நீதிமன்றத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியானது யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது.
மேலும் செய்திகள்
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...! தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு
வேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு
அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி
சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..!
சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..!!
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!