ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை!
2020-12-02@ 17:33:41

குடும்பத்தில் உள்ள ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பப் பணியை சிபிஎஸ்இ தொடங்கியுள்ளது. சிபிஎஸ்இ வழங்கும் இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தில் சேர்ந்து பயன்பெற தகுதியுள்ள மாணவிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ம் வகுப்பை முடித்த மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள். சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகள் இந்த உதவித்தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவிகள் மற்றும் 11 மற்றும் 12-ம் வகுப்பை சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள். எனினும் கல்வியாண்டில் மாதந்தோறும் கல்விக் கட்டணம் ரூ.1,500-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்தியக் குடிமகன்கள் மட்டுமே இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பெண் குழந்தைகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் பெற்றோரின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விதமாகவும் திறமையான மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி டிசம்பர் 10. விண்ணப்பப் படிவத்தைப் புதுப்பித்து சமர்ப்பிக்க வேண்டிய தேதி டிசம்பர் 28. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு cbse.nic.in என்ற இணையதளப் பக்கத்தை பார்க்கவும்.
Tags:
பெண் குழந்தைl உதவித்தொகைமேலும் செய்திகள்
இந்திய விமான ஆணையத்தில் மேலாளர் பணி
CLAT-2021 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
கூகுள் நிறுவனத்தின் குறையை சுட்டிக்காட்டிய சென்னை மாணவருக்கு சுமார் ரூ.2,30,000 பரிசுத் தொகை
GATE-2021 நுழைவுத்தேர்வுக்கான தேதிகளில், தகுதிகளில் மாற்றம்!
கலைநுட்பக் கல்வி கற்க அரசு கவின்கலைக் கல்லூரிகளில் சேரலாம்!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பொதுமேலாளர் வேலை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்