கணினித் தமிழ் விருது பெற விண்ணப்பிக்கலாம்!
2020-12-02@ 17:26:07

தலவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உலகம் முழுதும் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் தமிழக அரசு சார்பில் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குவோரை ஊக்குவிக்கும் வகையில், மென்பொருள் தயாரித்த தனிநபர் மற்றும் நிறுவனத்திற்கு 'முதல்வர் கணினித் தமிழ் விருது' வழங்கப்படும் என்று 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2020ம் ஆண்டுக்கான விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருது பெறுபவருக்கு விருது தொகையாக ரூ.1 லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.
விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருட்கள் 2017, 18, 19ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள், 'தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை –600 008' என்ற முகவரிக்கு டிசம்பர் 31ம் தேதிக்குள்சென்றடைய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 -28190412, 28190413 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் செய்திகள்
இந்திய விமான ஆணையத்தில் மேலாளர் பணி
CLAT-2021 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
கூகுள் நிறுவனத்தின் குறையை சுட்டிக்காட்டிய சென்னை மாணவருக்கு சுமார் ரூ.2,30,000 பரிசுத் தொகை
GATE-2021 நுழைவுத்தேர்வுக்கான தேதிகளில், தகுதிகளில் மாற்றம்!
கலைநுட்பக் கல்வி கற்க அரசு கவின்கலைக் கல்லூரிகளில் சேரலாம்!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பொதுமேலாளர் வேலை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்