நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணன் கைது..!
2020-12-02@ 15:34:42

சென்னை: நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பற்றி ஆபாசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். பெண் நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்களுக்கு எதிராகவும், ஆபாசமாக விமர்சித்து பதிவேற்றம் செய்துள்ளார்.
அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதுதொடர்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர், ராஜகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில், விசாரணைக்கு வந்தது. அவர்களிடம் நீதிபதிகள், 'முக நுாலில் அவதுாறாக பதிவிட்டால், கைது செய்கிறீர்கள். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இப்போது நீதித்துறை பற்றி பதிவிடப்பட்டுள்ளது. நாளை வேறு யார் பற்றியும் பதிவிட்டால் என்ன செய்வீர்கள்' என, கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை, சமூக வலைதளங்களில் உள்ள கர்ணன் பேச்சுக்கள் அடங்கிய பதிவுகளை முடக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் சென்னை ஆவடியில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மத்திய குற்றப்பரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
ஆதாரங்களுடன் ரூ.50,000 மேல் பணத்தை எடுத்துச் செல்லலாம்: ஆதாரமில்லாததை ஆணையம் பறிமுதல் செய்யலாம்...ஐகோர்ட் உத்தரவு.!!!
ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? : டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!!
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பது வெட்கக்கேடானது : தமிழக எம்.பி.க்கள் ஆவேசம்!!
மத்திய அரசு உடனடியாக சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்...! வைகோ வலியுறுத்தல்
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா!: சென்னை அண்ணா சாலையில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் பாடல் பாடி வாழ்த்து..!!
அரசு கல்வி நிறுவனங்களில் அனைத்து ஆவணங்களையும் தமிழ் மொழியில் மட்டுமே கையாள வேண்டும்...! உயர்கல்வித் துறை உத்தரவு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்