நீலகிரியில் 8 மாதத்திற்கு பின் இயக்க நடவடிக்கை: குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சோதனை ஓட்டம்
2020-12-02@ 12:15:57

குன்னூர்: 8 மாதங்களுக்குப் பிறகு நீலகிரியில் மலை ரயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது. இதையடுத்து குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த, 8 மாதங்களாக நீலகிரியில் ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தின் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மலை ரயில்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் குன்னூரில் இருந்து மலை ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மலை ரயில் மலைப்பாதை வழியே மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு ரயில் இயக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மலை ரயில் வருவதை கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:
மலை ரயில்மேலும் செய்திகள்
இரவு நேர ஊரடங்கு: பின்னலாடை நிறுவனங்கள் கடுமையாக பாதிப்பு
அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதி காசோலை 'பவுன்ஸ்'!: பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி..!!
ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து வேலூர் அரசு மருத்துவமனை அறிக்கை அளிக்க உத்தரவு
தீவிரமடையும் கொரோனா பரவல்!: வரலாற்றில் 2வது முறையாக மூடப்பட்ட பிரசித்திப்பெற்ற உதகை தாவரவியல் பூங்கா.. பார்வையாளர்களின்றி வெறிசோடல்..!!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட ராமேஸ்வரம் அரசு போக்குவரத்து கழகம்
வீட்டிலேயே உறவினர்கள் பிரசவம் பார்த்தபோது தாய், பெண் சிசு பரிதாப பலி
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்