நாளை உள்ளூர் விடுமுறை: புனித சவேரியார் பேராலய தேர்பவனி
2020-12-02@ 12:03:22

நாகர்கோவில்: கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் ஆடம்பரகூட்டுத் திருப்பலி நடந்து வருகிறது. விழாவின் 8ம் திருவிழா அன்று தேர்பவனி வழக்கமாக ஆலயத்துக்கு வெளியே உள்ள வீதிகளில் வலம் வரும். ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக, தேர் பவனியை நடத்துவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஆலய வளாகத்தில் தேர்பவனி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை திருப்பலி நடந்தது.
மாலை 6.30 மணிக்கு ஆடம்பரக் கூட்டுத்திருப்பலி கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தேர்பவனி நடந்தது. முதலில் காவல் சமணஸ் தேரும், அதன்பின்னால் தூய செபஸ்தியார் தேரும், தொடர்ந்து புனித சவேரியார் தேரும் வந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக தேரின் பின்னால் பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் செய்வதற்கு ஆலயம் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கவில்லை. இன்று சிறப்பு மாலை ஆராதனைக்குபின் இரவு தேர்பவனி நடக்கிறது. திருவிழாவின் நிறைவு நாளான நாளை காலை 11 மணிக்கு சிறப்புத் தேர்ப்பவனி நடக்கிறது. 10ம் திருவிழாவையொட்டி நாளை(3ம் தேதி) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
Tags:
புனித சவேரியார்மேலும் செய்திகள்
வாக்களர்களின் பிள்ளைகளுக்கு லஞ்சமா?: தஞ்சையில் ஜெயலலிதா, எடப்பாடி உருவ படம் பதித்த இலவச புத்தக பைகள் மூட்டை மூட்டையாக பறிமுதல்!!
கடலூர் மாவட்டம் வேப்பூரில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 40 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கின!: தேர்தல் பறக்கும் படை அதிரடி..!!
வனப்பகுதி நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை கோரி வழக்கு
யாரிடமும் நாம் கெஞ்சவில்லை தேமுதிகவிடம்தான் அதிமுக கெஞ்சுகிறது: எல்.கே.சுதீஷ் கெத்து
கொடைக்கானலில் காட்டுத்தீ
துறைமுகம் அமைக்கும் திட்டம் அதானிக்கு தாரைவார்ப்பா? குமரியை அழிக்கும் திட்டம் கைவிடாவிட்டால் போராட்டம்: எதிர்ப்பு இயக்கத்தினர் அறிவிப்பு
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்