சார்பதிவாளர்கள் 11 பேர் பணியிட மாற்றம்: பதிவுத்துறை ஐஜி சங்கர் உத்தரவு
2020-12-02@ 01:53:39

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் 11 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை ஐஜி சங்கர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, குன்னத்தூர் சார்பதிவாளர் வெங்கடேஸ்வரன் கோபி 1ம் எண் இணை சார்பதிவாளர், ராயக்கோட்டை சார்பதிவாளர் சண்முகவேல் தர்மபுரி அசல் பதிவு பிரிவு கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி அசல்பதிவு பிரிவு கண்காணிப்பாளர் முத்துக்குமார் நாமக்கல் சார்பதிவாளர் (நிர்வாகம்), வாசுதேவநல்லூர் சார்பதிவாளர் மாரியப்பன் செங்கோட்டை சார்பதிவாளர், திருப்பூர் சார்பதிவாளர் (நிர்வாகம்) ஈஸ்வரி குன்னத்தூர் சார்பதிவாளர், ஊத்துக்குளி சார்பதிவாளர் செல்வராஜ் சங்ககிரி சார்பதிவாளர், தாராபுரம் சார்பதிவாளர் இளவரசன் ஊத்துக்குளி சார்பதிவாளர்,
ஆம்பூர் சார்பதிவாளர் ஜெயக்குமார் கிருஷ்ணகிரி சார்பதிவாளர் (சீட்டு மற்றும் சங்கம்), உத்தமபாளையம் சார்பதிவாளர் கார்த்திகேயன் திருமங்கலம் சார்பதிவாளர், திருமங்கலம் சார்பதிவாளர் மகேந்திரன் மதுரை (தெற்கு) அசல் பதிவு பிரிவு கண்காணிப்பாளர், சிறுப்பாக்கம் சார்பதிவாளர் கோவிந்தராஜன் வேப்பூர் சார்பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்களை உடனடியாக விடுவித்து புதிய இடத்தில் தவறாது உடனே பணியில் சேர அறிவுரை வழங்குமாறு மாவட்ட பதிவாளர்கள் ஐஜி சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம்..! தமிழகத்தை சீரமைப்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு: கமல்ஹாசன் பேட்டி
தோல்வியை மறைக்கவே ‘வெற்றி நடை’ விளம்பரம்: முத்தரசன் தாக்கு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ2500 பெற இன்றே கடைசி நாள்: வாங்காதவர்கள் மாலைக்குள் பெற அறிவுறுத்தல்
பெருமைமிக்க பணி!: சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உட்பட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு..!!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் 10வது முறையாக மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!!
பேரறிஞர் அண்ணா 52 வது நினைவு நாளில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிப்பு
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!