வாகனத்தில் உள்ள வேகக்கட்டுப்பாடு அரசு கருவிகளை கண்காணிப்பதில்லை: ஐகோர்ட் அதிருப்தி
2020-12-02@ 01:53:03

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கனரக, இலகு வாகனங்கள், வேன், லாரிகளில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது போக்குவரத்து துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாகனங்கள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க எந்த ஒரு நடைமுறையும் பின்பற்றப்படுவதில்லை.
வாகனங்களில் ஒளிரும் பட்டை, இன்டிகேட்டர் விளக்கு எதையும் முறையாக பயன்படுத்துவதில்லை. அதுபோன்ற வாகனங்களில போக்குவரத்து துறை அதிகாரிகள் பயணித்தால் மட்டுமே தெரிய வரும். மிரர் வியூ கண்ணாடிகளை சரியான இடத்தில் பொருத்தாத ஆட்டோக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.அப்போது போக்குவரத்துத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் செயலாளர் பதில் அளித்தார். ஆனால் அரசினுடைய பதிலில் எந்த ஒரு திருப்தியும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 15ம் தேதி ஒத்தி வைத்தனர். அப்போது போக்குவரத்து துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
வேளச்சேரியா?..வெள்ளசேரியா!: வேளச்சேரி ஏரிகளை சீரமைக்காத தமிழக அரசை கண்டித்து திமுக-வினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!!
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எப்போது கல்லூரி திறப்பு.: 2 நாட்களில் முடிவு...அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
நடத்தையில் கணவர் சந்தேகத்தாலேயே நடிகை சித்ரா தற்கொலை செய்துள்ளார்: உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
தமிழகத்தில் மேலும் 549 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான முதல் ஆலோசனை கூட்டம்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்