17 ஆயிரம் குறைப்பு: உதவி பொறியாளர்களை சந்திக்க முதல்வர் மறுப்பு
2020-12-02@ 01:52:14

சென்னை: 7வது ஊதிய விகிதத்தில் 17 ஆயிரம் குறைக்கப்பட்டது தொடர்பாக பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சங்க நிர்வாகிகளை முதல்வர் எடப்பாடி சந்திக்க மறுத்த சம்பவம் அந்த துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்வாரியம், வேளாண்துறை, மீன்வளம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கமிட்டி அளித்த பரிந்துரையின் பேரில் 7வது ஊதிய குழு ஊதிய விகிதம் அமலானது. இதனால ஒவ்வொரு உதவி பொறியாளர்களும் 10 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை மாத ஊதியத்தில் இழக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2010 ஒரு நபர் குழுவின் பரிந்துரைப்படி வழங்கப்பட்ட ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டுமென்று என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடியை சந்திக்க கிரீன்வேஸ் சாலையில் .ள்ள முகாம் அலுவலகத்திற்கு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சங்க நிர்வாகிகள் சென்றனர். ஆனால், சங்க நிர்வாகிகளை முதல்வர் எடப்பாடி சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பொறியாளர்கள் 3 மணி நேர மேலாக அங்கேயே காத்திருந்தனர். இதை தொடர்ந்து, முதல்வரின் தனிச்ெசயலாளர் செந்தில்குமார் பொறியாளர் சங்க நிர்வாகிகளிடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்டார்.
மேலும் செய்திகள்
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கு வீடுகளுக்கே சென்று அடையாள அட்டை வழங்கப்படும்!: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு..!!
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை கருவான, முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் தேடப்படும் பவாரியா கொள்ளையனை 3 வாரத்திற்குள் கைது செய்ய உத்தரவு!!
எடப்பாடி பழனிசாமியை இயக்கும் பிரதமர் மோடியால் தமிழ்நாட்டை இயக்க முடியாது : கரூரில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை
கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம்..! தமிழகத்தை சீரமைப்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு: கமல்ஹாசன் பேட்டி
தோல்வியை மறைக்கவே ‘வெற்றி நடை’ விளம்பரம்: முத்தரசன் தாக்கு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ2500 பெற இன்றே கடைசி நாள்: வாங்காதவர்கள் மாலைக்குள் பெற அறிவுறுத்தல்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!