சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஆணையம் முதல்வரின் அறிவிப்பு மனநிறைவு அளிக்கவில்லை: ராமதாஸ் அறிக்கை
2020-12-02@ 01:41:39

சென்னை: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மனநிறைவு அளிக்கவில்லை என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: வன்னியர்களுக்கு 20 சதவித இடஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் தான் போராட்டத்தை பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி தலைமையில் வன்னியர் சங்கமும், பாமகவும் இணைந்து சென்னையில் இன்று நடத்தின. போராட்டத்தைத் தொடர்ந்து அன்புமணி மற்றும் போராட்டக் குழுவினரை அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, பாமக சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர், வன்னியர்களின் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து சாதகமான முடிவை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.
அதனடிப்படையில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான முதலமைச்சரின் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஏமாற்றம் நிறைந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன்பிறகு வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்குவதென்பது உடனடியாக சாத்தியமாகும் செயல் இல்லை. எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தை அமைப்பது உடனடியாக பயனளிக்காது. மாறாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
சசிகலாவின் சொந்தங்கள் சொத்துக்கு அலைகின்றனர்: புகழேந்தி குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சி அமைக்குமா என இப்போது கூறமுடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
முதலமைச்சர் ஆவோம் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு
மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் ராமதாஸ்: பாலகிருஷ்ணன் பேச்சு
பா.ஜனதாவில் சேர முடிவு புதுச்சேரி அமைச்சர்-எம்.எல்.ஏ ராஜினாமா: சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர்
சொல்லிட்டாங்க...
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்