பாஜவின் வேல் யாத்திரை திருச்செந்தூரில் 7ம் தேதி நிறைவு
2020-12-02@ 01:02:04

சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக பாஜவின் வெற்றிவேல் யாத்திரை கடந்த மாதம் 6ம் தேதி அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தொடங்கியது. நிவாரண பணிகள் காரணமாக யாத்திரை ரத்து செய்யப்பட்ட அறுவடை வீடுகளான சுவாமி மலை, பழமுதிர்சோலை மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் 5ம் தேதியன்று முருகனை தரிசித்து, 7ம் தேதி யாத்திரை நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடக்க இருக்கிறது. யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக பாஜ பொறுப்பாளரும், பாஜ தேசிய பொது செயலாளருமான சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 7ம் தேதி காலை 11 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.
மேலும் செய்திகள்
சசிகலாவின் சொந்தங்கள் சொத்துக்கு அலைகின்றனர்: புகழேந்தி குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சி அமைக்குமா என இப்போது கூறமுடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
முதலமைச்சர் ஆவோம் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு
மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் ராமதாஸ்: பாலகிருஷ்ணன் பேச்சு
பா.ஜனதாவில் சேர முடிவு புதுச்சேரி அமைச்சர்-எம்.எல்.ஏ ராஜினாமா: சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர்
சொல்லிட்டாங்க...
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்