வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது
2020-12-02@ 00:33:46

கலபுர்கி: வழிப்பறி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நான்கு ரவுடிகளை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். கலபுர்கி-ஷஹாபாத் அருகேயுள்ள ரிங் ரோட்டில் சாலையில் வாகனங்களில் செல்வோரை முகமூடி அணிந்து கொண்டு கத்தியை காட்டி மிரட்டியும், தாக்கியும் மர்ம நபர்கள் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து கலபுர்கி போலீசாருக்கு புகார்கள் வந்ததையடுத்து போலீசார் ரிங் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக தேஷ்பாண்டே, இக்பால் ரஜாக், முகமது இக்பால், அஸ்விக் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பைக் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வி.வி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் இருந்து காரில் பாக்கெட் சாராயம் கடத்திய அமமுக நிர்வாகி கைது
போரூர் சுங்கச்சாவடி அடித்து உடைப்பு: ஆசாமிகளுக்கு வலை
போலி மதுப்பாட்டில்கள் கடத்திய பெண் கைது
பணம் எடுத்து கொடுப்பதுபோல் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: வாலிபர் கைது
இளம்பெண்கள் குளிப்பதை ரசிக்க செல்போனில் படம் எடுத்தவரை சரமாரி அடித்து போலீசில் ஒப்படைப்பு
கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளை
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்