SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

2020-12-02@ 00:33:45

மண்டியா: இரண்டு குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் பாண்டவபுரா அருகே நடந்துள்ளது. மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா குப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகவுடா. இவருக்கும் மேல்கோட்டை அடுத்து நல்லஹள்ளி  கிராமத்தை சேர்ந்த நிவேதிதா (26), என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது தம்பதிகளுக்கு கானவி (6), உல்லாஸ் (4) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர். தம்பதிகள் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

 இந்நிலையில், சம்பவத்தன்று காலை கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் நிவேதிதா தனது இரண்டு குழந்தைகளை தூக்கிட்டு கொலை செய்து  தானும் தூக்கிட்டு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த குடும்பத்தினர் வீட்டுக்கு வந்த போது தற்கொலை சம்பவம் தெரியவந்தது. இது குறித்து மேல்கோட்டை போலீசாருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.  பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-01-2021

    18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்