முதல்வராக எடியூரப்பாவே தொடர்ந்து நீடிப்பார்: அமைச்சர் ஆனந்த்சிங் தகவல்
2020-12-02@ 00:33:35

கொப்பள்: மாநில முதல்வராக இரண்டரை ஆண்டுகள் எடியூரப்பா தொடர்ந்து நீடிப்பார் என்று அமைச்சர் ஆனந்த்சிங் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: சிலர் தனிப்பட்ட காரணத்தால் விஜயநகர் மாவட்டம் வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆட்சேபனைகள் தெரிவிக்க தற்போது மாநில அரசு ஒரு மாதம் காலம் அவகாசம் வழங்கியுள்ளது. விஜயநகர் மாவட்டத்துடன் சண்டூர் மக்கள் இணைவதாக தெரிவித்துள்ளனர். ஆட்சேபனைகள் எடுத்துக்கொண்டு மாநில அரசு தனது முடிவை எடுக்கும்.
பிரதமர் நரேந்திரமோடி விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். ஆனால் எதிர் கட்சியினர் விவசாயிகள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். மாநில அமைச்சரவை சில காரணங்களால் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் விஸ்தரிக்கப்படும். அப்போது அனைவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. கிராம பஞ்சாயத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வராக இரண்டரை ஆண்டுகள் எடியூரப்பா தொடர்ந்து நீடிப்பார் என்றார்.
மேலும் செய்திகள்
மேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய விளம்பர பதாகைகளை 72 மணி நேரத்திற்குள் அகற்ற உத்தரவு!!
ஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிபல் வனப்பகுதியில் தொடரும் காட்டுத்தீ!: விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பட்நாயக் உத்தரவு..!!
பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!: டாப்ஸி, காஷ்யப் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்..!!
தொடர்ந்து குறையும் குணமடைந்தோர் விகிதம்... தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் 100க்கு கீழே சென்றது : இந்தியாவில் கொரோனா நிலவரம்!!
100வது நாளை எட்டியது டெல்லி விவசாயிகளின் போராட்டம் : தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய முடிவு!!
விலங்குகளையும், அவற்றிற்கான வாழ்விடங்களையும் உறுதிப்படுத்த வேண்டும்..! உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்