மீண்டும் மிதக்கும் ஒலிம்பிக் வளையங்கள்
2020-12-02@ 00:07:44

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக அகற்றப்பட்ட 5 வண்ண பிரமாண்ட ஒலிம்பிக் வளையங்கள் கொண்ட மிதவை படகு ஜப்பான் கடலில் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. டோக்கியோவில் கடந்த ஜூலை மாதம் தொடங்குவதாக இருந்த கோடைகால ஒலிம்பிக் போட்டி, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. எனினும், போட்டியை நடத்துவதற்கான திட்டமிடல் பணியில் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியை விளம்பரப்படுத்தும் முயற்சியாக ஒடைபா மெரைன் பூங்காவில் பிரமாண்டமான 5 வண்ண ஒலிம்பிக் வளையங்கள் மிதக்க விடப்பட்டு இருந்தன. அந்த வளையங்கள் ஆக.6ம் தேதி அகற்றப்பட்டன.
இழுவை படகு மூலம் அங்கிருந்து கப்பல் பராமரிப்பு பகுதிக்கு ஒலிம்பிக் வளையங்கள் நிறுவப்பட்ட மிதவை கொண்டு செல்லப்பட்டது. ‘பராமரிப்பு பணிகளுக்காகவே ஒலிம்பிக் வளையங்கள் கடலிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. பராமரிப்பு பணிகள் முடிய இன்னும் 4 மாதங்கள் ஆகும். அதன்பிறகு மீண்டும் ஒலிம்பிக் வளைங்கள் அதே இடத்தில் வைக்கப்படும்’ என்று ஒலிம்பிக் கமிட்டி கூறியிருந்தது. இந்நிலையில் வண்ண ஒலிம்பிக் வளையங்களுடன் கூடிய மிதவை படகு நேற்று காலை ஜப்பான் கடலுக்கு மீண்டும் இழுத்து வரப்பட்டது. டோக்கியோ வளைகுடாவில் வானவில் பாலத்தின் அருகே அந்த படகு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் வழங்க வேண்டும்: கோஹ்லிக்கு பிஷன் சிங்பேடி அறிவுறுத்தல்
நடராஜனை தமிழில் வாழ்த்திய வார்னர்
ஆஷஸ் தொடர் இனி முக்கியமில்லை; இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது தான் சாதனை: இங்கிலாந்து மாஜி வீரர் ஸ்வான் பேட்டி
இந்திய அணி வீரர்களோடு ஒப்பிடும்போது, நமது இளம் வீரர்கள் எல்கேஜி மாணவர்கள்.: கிரேக் சேப்பல் காட்டம்
ஆஸ்திரேலியா தொடரை இந்தியா வெல்ல முக்கிய காரணம் ராகுல் டிராவிட்: பாக்.முன்னாள் கேப்டன் இன்சமாம் புகழாரம்.!!!
இந்தியா விளையாடும் 2 டெஸ்ட் போட்டி: சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!