SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயிகளின் பணத்தை சுருட்டிய அதிகாரி சிக்காமல் இருக்க பேரம் பேசுவதை சொல்கிறார்: wiki யானந்தா

2020-12-01@ 00:17:13

‘‘விவசாயிகளின் பெயரில் கடன் வாங்கி மோசடி செய்த அதிகாரியை கிராம மக்கள் வசைப்படுறாங்களாமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ‘எண்ணில் துவங்கும்’ பெயர் கொண்ட ஊரின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 2018-2019ம் ஆண்டு நெல் பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செஞ்சாங்க... அவர்களுக்கு வந்த இழப்பீடு தொகை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம். காரணம் கடன் வாங்கியதாக காப்பீடு தொகையில் ஒரு பகுதியை பிடிச்சுட்டாங்களாம். இதுல பாதிபேர் கடனே வாங்கலையாம்... தோண்டி துருவி விசாரித்ததில் வங்கி அதிகாரி ஒருவர், விவசாயிகளின் பெயரில் போலியா கையெழுத்து போட்டு 50 லட்சம் வரை பணத்தை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. கொதித்துப் போன விவசாயிகள் போராட்டத்திற்கு தயாராகிட்டாங்க... இதற்கிடையே விவசாயிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமாதானம் செய்து வர்றாங்க. சிலரிடம் இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றும் பேரம் பேசுறாங்களாம். ஆனாலும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓய மாட்டோம் எனக்கூறும் விவசாயிகள் கொந்தளித்து போய் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒரே பதவிக்கு 2 பேரை நியமித்ததால் குழப்பத்தில் இருக்கும் காக்கிகளை பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குமரியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் இருக்கும் அதிகாரி இரண்டு ஆண்டுகளாக பணியில் இருக்காராம். இந்த பணியிடம் காலியாக இருப்பதாக நினைத்து வேறொரு பெண் இன்ஸ்பெக்டரை நியமிச்சாங்க. ஆனாலும் குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவிலேயே பழைய அதிகாரி நீடிக்கிறாராம். புதிதாக நியமிக்கப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் பணிக்கு வந்தார். அவருக்கு எங்கு பணி கொடுப்பது என தெரியாமல் அதிகாரிகள் குழம்பி போய், இன்ஸ்பெக்டர் பணியிடம் இல்லாத ஸ்பெஷல் யூனிட்டுக்கு, நியமித்து இருக்காங்க. காவல்துறையை பொறுத்தவரை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால், இடமாற்றம் என்பது மிகவும் கவனமாக நடக்கும். அப்படி இருந்தும் பணியிடத்தில் உள்ள ஒருவரை மாற்றாமல், புதிதாக வேறொருவரை நியமித்து குழப்பத்தை ஏற்படுத்தினர். 1 மாதமாக இந்த குழப்பம் குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் நீடிக்கிறது என்று அதிகாரிகள் பேசிக் கொள்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘போலீஸ் ஏட்டுவை மிரட்டிய முட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காக்கி அதிகாரி யாரு...’ என்றார் பீட்டர் மாமா.‘‘முட்டைக்கு பேமசான மாவட்டத்தில் புதுசா பொறுப்பேத்துக்கிட்ட எஸ்பி, கஞ்சா கும்பலை கைது செய்ய உத்தரவு போட்டாராம். இதனால, பல பேரு கைது செய்யப்பட்டாங்க. இறுதியில், கஞ்சா கும்பலை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை எஸ்ஐ ஒருவர், 3 கஞ்சா வண்டியை பிடித்து விட்டு, ஒரு வண்டி மீது வழக்குப்பதிவு செய்யவில்லையாம். இதுபற்றி விஜிலென்ஸ் போலீசார் ரகசியமாக விசாரிக்க துவங்கியதும், எஸ்பி அதிரடியாக அந்த எஸ்ஐயை வேறு ஸ்டேஷனுக்கு மாற்றிவிட்டாராம். இதற்கு பிறகு டவுன் பகுதியில் இரவில் போதையில் சுற்றிய வாலிபர்கள் மீது, ஏட்டு ஒருவர் வழக்குப்பதிவு செய்ய முயன்றாராம். இதையறிந்த அந்த வாலிபர்களில் ஒருவரின் உறவினரான விஜிலென்ஸ் எஸ்ஐ, ஏட்டுவை போனில் தொடர்பு கொண்டு தொலைத்து விடுவதாக மிரட்டினாராம்.

பின்னர், ஏட்டு வாலிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக எஸ்பியிடம் பற்ற வைத்து விட்டாராம். இதையடுத்து, அந்த ஏட்டையும் தொலைதூர ஸ்டேஷனுக்கு எஸ்பி டிரான்ஸ்பர் செய்து விட்டதாக முட்டை மாவட்டத்தில் பேச்சு ஓடுகிறது. ஒருதலைபட்சமாக விஜிலென்ஸ் போலீசாரின் பேச்சை கேட்டு எஸ்பி நடவடிக்கை எடுப்பதால், யார் பேச்சை கேட்பது என்று முட்டை மாவட்டத்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நீடிக்குதாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘கமிஷனுக்காக ஆறு ஆண்டுகளாக கான்டிராக்டர்களின் பில் தொகையை கோவையில நிறுத்தி வைச்சு இருக்காங்களாமே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கோவை புறநகர் பகுதிகளில் உள்ள பேரூராட்சிகளில் தார்சாலை அமைத்தல், சாக்கடை கால்வாய் கட்டுதல், தெருவிளக்கு பொருத்துதல், குடிநீர் விநியோகம் போன்ற பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டு, தனியார் காண்ட்ராக்டர்கள் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில், கடந்த 2014ம் ஆண்டு முடிக்கப்பட்ட பல பணிகளுக்கு இன்றுவரை பில், செட்டில் செய்யப்படவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக, பல கோடி ரூபாய் பணம் நிலுவையில் உள்ளது. ஒப்பந்த பணிகள் முடிக்கப்பட்டு விட்டாலும், பணம் செட்டில்மென்ட் செய்யாமல் பெரும் இழுபறி நீடிக்கிறது.

இந்த விவகாரம், உள்ளாட்சி அமைப்புகளில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. சில அதிகாரிகள் பெர்சன்டேஜ் விவகாரத்தில் ரொம்பவே கறாராக இருப்பது
தான், இதற்கு முக்கிய காரணமாம். அதுவும் பத்துக்கு மேல யார் ெகாடுத்தாலும் அவர்களின் பில் மட்டும் தான் பாஸ் ஆகிறதாம். இதனால கான்டிராக்டர்கள் அப்செட்டில் இருக்காங்களாம்... கமிஷன் விவகாரத்தில், இப்படி கறாராக இருப்பதால் என்ன செய்வது? என தெரியாமல் கான்ட்ராக்டர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இது குறித்து துறை அமைச்சரிடம் புகார் கொடுக்கவும் முடிவு செய்து இருக்காங்க...’’ என்றார் விக்கியானந்தா. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sun-dong25

  அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!

 • hongkomgggg_1111

  ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்

 • china-gold25

  அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!

 • 25-01-2021

  25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-01-2021

  24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்