SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2020-12-01@ 00:16:57

* இங்கிலாந்தின் ஹைபரி நகரில் உள்ள எமிரேட்ஸ் ஸ்டேடியத்தில் உல்வர்ஹாம்ப்டன் - கன்னர்ஸ் அணிகளிடையே நடந்த பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில், எதிர்பாராத விதமாக கன்னர்ஸ் வீரர் டேவிட் லூயிசுடன் மோதிக்கொண்ட உல்வ்ஸ் வீரர் ராவுல் ஜிமனஸ் படுகாயம் அடைந்தார். மண்டையோட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு அவசர அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
* கால்பந்து நட்சத்திரம் மரடோனா மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், முன்னதாக மூளை அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக டாக்டர் லியோபோல்டோ லூக்கின் கிளினிக்கில் ரெய்டு நடத்தப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
* இந்திய அணியுடன் சிட்னியில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாக தனக்கு கடுமையான தலைசுற்றல் இருந்ததாகவும், அந்த போட்டியில் விளையாட முடியுமா என சந்தேகப்பட்டதாகவும் தொடர்ச்சியாக 2வது சதத்தை விளாசி அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
* இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது காயம் அடைந்த ஆஸி. அணி தொடக்க வீரர் வார்னர், கடைசி ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sun-dong25

    அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!

  • hongkomgggg_1111

    ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்

  • china-gold25

    அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!

  • 25-01-2021

    25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-01-2021

    24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்