வழிப்பறி, கொள்ளை சம்பவங்களால் பெண்கள் தனியாக செல்ல அச்சம்
2020-11-30@ 12:32:04

மானாமதுரை: மானாமதுரை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் நான்கு வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. தொடரும் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களால் டூவீலரில் தனியாக செல்ல அச்சமடைந்துள்ளனர். குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க ரோந்து பணியில் கூடுதல் போலீசாரை நியமிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மானாமதுரை அருகே மானம்பாக்கி கிராமத்திற்கு நடந்து சென்ற மூதாட்டியை அடித்து உதைத்து அவரிடமிருந்து செயின், தோடு உள்ளிட்டவற்றை மர்ம கும்பல்கள் பறித்து சென்றது. அதன்பின் வேலூர் விலக்கு அருகே கடந்த வாரம் டூவீலரில் சென்ற பெண்ணிடம் நகையை மர்ம கும்பல் பறித்து சென்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆரம்ப சுகாதார நர்ஸ் ஒருவர் சிவகங்கையில் இருந்து வரும்போது அவரது மூன்றரை பவுன் தாலி செயினை பறித்து சென்றது. மானாமதுரை சிவகங்கை இடையே கொன்னக்குளம் விலக்கு முதல் பெரியகோட்டை விலக்கு வரை யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்துள்ளதால், இந்த பகுதியில் மறைந்து இருக்கும் வழிப்பறி கொள்ளையர்கள் திடீரென ரோட்டிற்கு வந்து அந்த வழியாக செல்வோரை கத்தியை காட்டி மிரட்டி செயின், செல்போன்,பணம் உள்ளிட்டவற்றை பறித்து செல்வது வழக்கமாக உள்ளது.
பணம், நகைளை இழப்பதுடன் சில நேரங்களில் பொதுமக்களுக்கு உடல் ரீதியாக காயங்களையும் மர்ம கும்பல் ஏற்படுத்துகிறது. சிவகங்கைக்கு தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் தனியாக டூவீலர்களில் சென்று வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வரும் வழிப்பறி சம்பவங்கள் சமூக வலைதளங்களில் படங்களுடன் பகிரப்படுவதால் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு மிகுந்த தயக்கம் காட்டி வருகின்றனர். தினசரி வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பற்ற முறையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் சரவணன் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக மானாமதுரை சிவகங்கை பைபாஸ் ரோடு, சுந்தரநடப்பு முதல் கொன்னக்குளம் ரோடு வரையிலும் மர்ம நபர்கள் கும்பலாக முகக்கவசம் அணிந்து சுற்றி வருகின்றனர்.
இதனால் சிவகங்கை மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பெண்கள் தனியாக டூவீலரில் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் வேலூர், மானம்பாக்கி, உருளி, மாடக்கோட்டை கிராமங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் பஸ் ஸ்டாப்புகளில் இறங்கி ஊருக்குள் நடந்து செல்லவும் அச்சமடைகின்றனர்.
வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் இருக்க பெரியகோட்டை முதல் சுந்தரநடப்பு வரையிலும், சாமியார்பட்டி முதல் மேலக்கொன்னக்குளம் வரையிலும், இடைக்காட்டூரில் இருந்து புதுக்குளம் வழியாக வேம்பத்தூர், இந்திரா நகர் வழியாக சுந்தரநடப்பு வரையிலும் புதிதாக டூவீலர் ரோந்து போலீசாரை நியமிக்கவேண்டும். இது தவிர மானாமதுரை சிவகங்கை தாலுகாவிற்குட்பட்ட பெரியகண்மாய்களில் பதுங்கி இருக்கும் மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்தும் வருவாய்த்துறை கிராம உதவியாளர் மூலமாக தகவல்கள் சேகரித்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
மேலும் செய்திகள்
திருப்பூரில் ஏ.டி.எம் இயந்திரத்தை அடியோடு பெயர்த்தெடுத்து தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை
வீட்டில் நகை கொள்ளை
மனைவியை பிரித்து விட்டதாக கூறி கத்தியால் குத்தி சாமியார் கொலை: தொழிலாளி கைது
தனியார் கம்பெனியில் கார் திருட்டு: டிரைவர் கைது
மாமூல் தர மறுத்ததால் ஆத்திரம்: ஒப்பந்ததாரரை தாக்கிய அதிமுக பிரமுகர் கைது
கோவை வாளையார் வழியே கேரளாவுக்கு கடத்த முயன்ற ஜெலட்டின் குச்சிகள் சிக்கியது: இருவர் கைது
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!