SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் அடுத்த 2 ஆண்டுகளில் மழைநீர் தேங்காது: கோ.பிரகாஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்

2020-11-30@ 04:10:23

சென்னையின் மழைநீர் வடிகால் கட்டமைப்பு நான்கு வடிநிலப்பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோவளம், அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு என்று நான்கு வடி நிலப்பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அடையாறு மற்றும் கூவம் வடிநில பகுதிகளில் உலக வங்கி நிதி உதவியுடன் 500 கிலோ மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் மாநில நிதி ஆதாரத்தின் கீழ் 400 கிலோ மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 1000 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது.

கொசஸ்தலையாறு வடி நிலப்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.2,800 கோடி செலவில் உலகத் தரத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த பணி நிறைவடைந்தால் வடசென்னை பகுதியில் தண்ணீர் தேங்காது. தென்சென்னை பகுதியில் கோவளம் வடி நில பகுதியில் ரூ.3,500 கோடி செலவில் ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்த உள்ளோம். இதற்கான டெண்டர் விரைவில் கோரப்படும். இந்த பணிகள் எல்லாம் முடிந்தால் எவ்வளவு மழை பெய்தாலும் சென்னை மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இன்னும் 2 ஆண்டுகளில் சென்னை மழைநீர் தேக்கம் இல்லாத பகுதியாக மாறும்.

ஒவ்வொரு பருவமழைக்கு முன்பாகவும் மழைநீர் வடிகால் முழுமையாக தூர்வாரப்படும். இந்த பணிகளை முறையாக செய்த காரணத்தால் மழைநீர் வடிகால்களில் எந்த அடைப்பும் இல்லாமல் உள்ளது. இதைத் தவிர்த்து சென்னை மாநகராட்சியில் உள்ள 210 நீர் நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் நிறைய நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக அந்த இடத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. நீர் நிலைகளை சீரமைத்து மக்களின் கண்காணிப்பு தொடர்ந்து இருப்பதால் யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. மழைக்காலத்தில் மழைநீர் இந்த நீர் நிலைகளுக்கு வந்து செல்வதால் வெள்ளம் வருவது தடுக்கப்படும். மேலும் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் இணைந்து 200 குழுக்கள் அமைத்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தும் பணியை செய்துவருகிறது. சென்னை மாநகராட்சி பணிகளில் இது மிகவும் முக்கியமானது. வீடுகள், பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கும் பணி தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும். பொதுமக்கள் தங்களின் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இதற்கு உதவி தேவைப்பட்டால் சென்னை மாநகராட்சி அதிகாரிகளை எப்போது வேண்டும் என்றாலும் அணுகலாம்.

தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் சேரும் நீர் செம்மஞ்சேரி கால்வாய் பகுதியை கடந்து சென்று தான் கடலில் கலக்கிறது. இந்த பிரச்னைக்கு அறிவியல் பூர்வமாக தீர்வு காண சிறப்பு திட்டங்கள் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை மாநகராட்சிகளுக்கு இடையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் இணைந்து 200 குழுக்கள் அமைத்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தும் பணியை செய்து வருகிறது. பொதுமக்கள் தங்களின் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு  கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

* பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம்: மீனாட்சி சுந்தரம், ஓய்வுபெற்ற சென்னை குடிநீர் வாரிய பொறியாளர்
சென்னை நகரம் ஒரு சமதளமான பகுதி. ஐதராபாத், டெல்லி, பெங்களூரு நகரம் போல் சென்னை நகரம் கிடையாது. சென்னை நகர் பகுதியில் கழிவு நீர் குழாய், மழைநீர் வடிகால்கள் என 2 விதமான வடிகால் அமைப்புகள் உள்ளன. சென்னை நகரில் 5,550 கிலோ மீட்டர் சாலைகள் உள்ளது. இந்த சாலைகளின் ஓரங்களில் 7,200 கிலோ மீட்டரில் கழிவு நீர் வடிகால் பாதைகள் உள்ளது. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தான் மழைநீர் வடிகால்கள் உள்ளது. இது 2,350 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இவை வயது முதிர்ந்த நிலையில் தான் உள்ளது.

100 வருடத்திற்கும் மேற்பட்ட வடிகால் கட்டிடங்களும் இங்கு உள்ளது. தற்போது, மழைநீர் வடிகால்களை மக்கள் குப்பை தொட்டியாகவே பயன்படுத்துகிறார்கள். 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது இஎஸ்ஐ மருத்துவமனை முழுவதும் தண்ணீர் தேங்கி கிடந்தது. என்ன செய்தும் தண்ணீர் வடியவில்லை. எங்கள் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்த போது அங்கிருந்த வடிகாலில் மணல் மூட்டைகளை போட்டு மூடியிருந்தனர். இதை சீர் செய்த பிறகே மழைநீர் செல்ல வழியாக இருந்தது. இதுபோல், கள்ளத்தனமாக செய்பவர்களின் மூலம் மழைநீர் அதன் வழியே செல்ல முடியாமல் தேங்கி விடுகிறது.

சென்னையின் வடிகால்கள் என்பது 4 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களின் வழியே மழைநீர் எப்படி தேங்காமல் வெளியே செல்வது என்பது குறித்த பணிகளை செய்துள்ளார்கள். 3 வடிகால் அமைப்புடன் 60 சதவீத பணிகள் நடந்துள்ளது. அனைத்தும் ஒருங்கிணைந்து கடலுக்கு செல்லும் வகையில் ஒரு செயல் திட்டத்தை அரசு செய்துள்ளது. இதேபோல் புயல், வெள்ளம், குறைந்த காற்றழுத்தம் வரும்போது கடலில் உயர் அலைகள் அதிகமாக இருக்கும். உயர் அலைகள் வரும் போது நகரில் உள்ள தண்ணீர் கடலுக்கு செல்லாது. கடல் அலைகள் சீற்றம் சீரான பிறகு தான் நகரில் உள்ள தண்ணீர் செல்லும்.  

மக்கள் அரசை பற்றி குற்றம் சொல்வதை விட்டு விட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதில் மக்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே வெற்றிபெறும். மழைநீர் சேகரிப்பு திட்டம் 7 வருடமாக சரியாக செயல்பட்டது. அதன்பின் மக்கள் திட்டத்தை சரிவர கடைபிடிக்காததால் மழைநீர் சேகரிப்பில் பின்னடைவு ஏற்பட்டது. சென்னையில் 11 லட்சம் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் 10 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு செய்யப்பட்டுவிட்டது. இந்த வீடுகளில் உள்ள மக்கள் தாமாக முன்வந்து மழைநீர் சேகரிப்பு அமைப்பு சரியாக இருக்கிறதா, இல்லை என்றால் மழைநீரை சேமிக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளை சீரமைப்பு செய்து அவற்றை பராமரிக்க வேண்டும். மக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு திட்டமும் வெற்றிபெறாது.

அரசு கொடுக்கும் வழிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடித்தாலே போதும் பல்வேறு பிரச்னைகளை நாம் தவிர்க்க முடியும். இதேபோல், கட்டமைப்புகளை சீரமைக்கும் பணியிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். சென்னையில் 11 லட்சம் வீடுகள்  உள்ளன. இதில் 10 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு செய்யப்பட்டுவிட்டது. இந்த வீடுகளில் உள்ள மக்கள் தாமாக முன்வந்து மழைநீர் சேகரிப்பு அமைப்பு சரியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். இல்லை என்றால் சீரமைப்பு செய்து சரியாக பராமரிக்க வேண்டும். மக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு திட்டமும் வெற்றிபெறாது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்