செண்பகராமன்புதூரில் பரபரப்பு: டி.எஸ்.பி. தலைமையில் இன்று போலீஸ் குவிப்பு
2020-11-29@ 20:15:52

ஆரல்வாய்மொழி: செண்பகராமன்புதூர்-இந்திரா காலனியில் ஜெபகூட்டம் நடத்துவது சம்மந்தமாக இந்திரா காலனியை சேர்ந்த ராமர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி நாகர்கோவில் டி.எஸ்.பி வேணுகோபால் தலைமையில் நேற்று இரவு காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் பாஜ.க மாவட்ட பொதுசெயலாளர் சொக்கலிங்கம், தோவாளை ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் உள்பட 8 பேரும், தினகரன் என்பவரது தரப்பில் வழக்கறிஞர் புனிததேவகுமார், அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சங்க தலைவர் ராஜகிருபாகரன், ரெஜிமோன் உள்பட 7 பேரும் பங்கேற்றனர். தொடர்ந்து ஆரல்வாய்மொழி ஆய்வாளர் ஜானகி இரு தரப்பினரிடமும் தலா 3 பேர்களிடம் தனித்தனியாக 2 முறை பேச்சு வார்த்தை நடத்தினார்.
இரு மதத்தினர் இடையே பிரச்னை இருந்து வருவதால் வருவாய்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசப்பட்டது. அதன் அடிப்படையில் 2 தரப்பினரும் சென்றனர். இந்த நிலையில் இன்று காலையில் செண்பகராமன் புதூரில் உள்ள அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டி.எஸ்.பி வேணுகோபால், இன்ஸ் பெக்டர் ஜானகி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
மேலும் செய்திகள்
தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : வானிலை ஆய்வு மையம் தகவல்
முனியாண்டி கோயில் திருவிழா :100 கிடாய்கள் வெட்டி அன்னதானம்
மீண்டும் முதல்வர் எடப்பாடி தானாம் : கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு குவிந்த மக்கள்: விலை உயர்வு
திருச்சுழி தாலுகாவில் தொடர்மழை 5000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்
கரூர் சுக்காலியூர் அருகே சரிந்து விழுந்தது மின்கம்பங்கள்: கரன்ட் இல்லாமல் மக்கள் கடும் அவதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்