விஜய்சங்கரால் பாண்டியா அளவுக்கு பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியாது: கவுதம்கம்பீர் பேட்டி
2020-11-29@ 17:47:30

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பேட்டி: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி சம நிலையில்லாமல் தடுமாறுகிறது. இந்த தடுமாற்றம் இப்போது ஏற்பட்டதல்ல, கடந்த உலகக்கோப்பைப் போட்டியிலிருந்து இந்த தடுமாற்றம் தொடர்கிறது. ஹர்திக் பாண்டியா பந்துவீசும் அளவுக்கு உடற்தகுதியில்லாமல் இருந்தால், 6வது பந்துவீச்சாளரை எங்கிருந்து கொண்டு வருவீர்கள். விஜய் சங்கர் மட்டுமே வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வரிசையில் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ஆனால், 5வது அல்லது 6வது வரிசையில் களமிறங்கி பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை விஜய் சங்கரால் ஏற்படுத்திவிட முடியுமா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது.
இதே போல் அவரால் 7-8 ஓவர்கள் நேர்த்தியாக வீச முடியுமா? என்பதும் சந்தேகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதுபோல் ரோகித் சர்மா அணிக்கு திரும்பினாலும் கூட இது போன்ற சிக்கலை சரி செய்ய முடியாது. டாப் வரிசை பேட்ஸ்மேன்களில் ஒன்றிரண்டு ஓவர்கள் வீசுவதற்கு யாரும் இல்லை. ஆனால் ஆஸ்திரேலிய அணியில் இந்த பிரச்சினை இல்லை. ஆல்-ரவுண்டர்கள் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல் கைகொடுக்கிறார்கள் என்றும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து
கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்... நடராஜன் உற்சாக பேட்டி
இலங்கை முன்னிலை பெற வாய்ப்பு: எம்புல்டெனியா அபார பந்துவீச்சு
சேப்பாக்கத்தில் 2 டெஸ்ட் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வருகை
திருவில்லிபுத்தூரில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்