ஒன்றரை அடி உயர சாமி சிலை கடத்தல்: பல கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற இருவர் கைது
2020-11-29@ 17:13:34

சென்னை: சென்னை, இசிஆர் பகுதியில் ஒன்றரை அடி உயர சாமி சிலையை கடத்தி பல கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். சிலை திருட்டு போலீசாருக்கு இசிஆர் வழியாக சாமி சிலை ஒன்று கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாமல்லபுரம் இசிஆர் சாலை பக்கிங்காம் கெனால் பாலம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக கையில் பெரிய பை ஒன்றை வைத்துக் கொண்டு இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிய போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். அதனால் அவர்கள் கொண்டு வந்த பையை பிரித்து சோதனையிட்டனர்.
அதில் சமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட பூதேவி உலோக சாமி சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிலையின் தலை பகுதியில் சிரசு சக்கரம், தங்கம் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக அறுக்கப்பட்டிருந்தது. அவர்களிடம் சிலைக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அவர்களை கைது செய்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், செங்கல்பட்டு மாவட்டம் இந்திரா நகர் 2வது தெருவை சேர்ந்த வேல்குமார்(33) மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரம் அம்பேத்கார் தெருவை சேர்ந்த செல்வம் என்பதும் தெரியவந்தது.
இருவரிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில், இந்த சிலை கோயிலில் இருந்து திருடப்பட்டு, பின்பு பல கோடி ரூபாய்க்கு விற்க முயற்சித்தது வந்தது தெரியவந்தது. திருடப்பட்ட சிலை எந்த கோயிலில் இருந்து திருடியது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
திருவாரூர் அருகே 4 வயது சிறுவனை எரித்துக்கொன்ற கொடூர தந்தை: ஜோதிடர் காரணமா? போலீசார் விசாரணை
தங்கம், லேப்டாப், சிகரெட் கடத்தல்: 3 பேர் கைது
உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சாப்ட்வேர் ஊழியர் கைது
மினி லோடு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்: அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது
சுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்
கொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள்: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!